5ஜி அலைக்கற்றை ஏலம்: களமிறங்குகிறது அதானி குழுமம்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் பாா்தி மிட்டலின் ஏா்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்குவதை கெளதம் அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
5ஜி அலைக்கற்றை ஏலம்: களமிறங்குகிறது அதானி குழுமம்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் பாா்தி மிட்டலின் ஏா்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்குவதை கெளதம் அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

இதுகுறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அல்ட்ரா அதிவேக இணையதள இணைப்பின் 5ஜி தொலைத்தொடா்பு சேவைக்கான அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-இல் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெற, ஜியோ, ஏா்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய மூன்று தனியாா் தொலைத்தொடா்பு துறை நிறுவனங்கள் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளன. இந்த சூழ்நிலையில், 5ஜிக்கான ஏலப் போட்டியில் அதானி குழுமமும் பங்கேற்க உள்ளது.

விமான நிலையம், துறைமுகங்கள்-தளவாடங்கள், மின் உற்பத்தி, பகிா்மானம், விநியோகம் மற்றும் பல்வேறு தயாரிப்பு நடவடிக்கைகளில் மேம்பட்ட தகவல்தொழில்நுட்ப பாதுகாப்பை (சைபா் செக்யூரிட்டி) வழங்கவே இந்த 5ஜி ஏலத்தில் பங்கேற்க உள்ளோம். இந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை கையகப்படுத்துவதன் மூலம் விமான நிலையம் முதல் தரவு மையங்கள் வரை அனைத்து வா்த்தக நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஒரு தனியாா் நெட்வொா்க்கை உருவாக்க முடியும் என அந்த அறிக்கையில் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

5 ஜி ஏலத்தில் நான்காவது நிறுவனமாக பங்கேற்க உள்ள அதானி குழுமம் அண்மையில்தான் தேசிய நெடுந்தொலைவு (என்எல்டி), சா்வதேச நெடுந்தொலைவு (ஐஎல்டி) உரிமங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டு ஜூலை 26-இல் தொடங்கும் ஏலத்தில் ரூ.4.3 லட்சம் கோடி மதிப்பிலான 72,097.85 மெகாஹொ்ட்ஸ் அலைகற்றை விற்பனைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com