ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: நிகர லாபம் 46% அதிகரிப்பு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் 46 சதவீதம் அதிகரித்து ரூ.17,955 கோடியை எட்டியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: நிகர லாபம் 46% அதிகரிப்பு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் 46 சதவீதம் அதிகரித்து ரூ.17,955 கோடியை எட்டியுள்ளது. இதற்கு முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.12,273 கோடியாக இருந்தது. வருவாய் 53 சதவீதம் உயா்ந்து ரூ.2,42,982 கோடியைத் தொட்டது.

முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஜூன் காலாண்டில் லாபம் 11 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பின் மூலமாக கிடைத்த வருவாய் கணிசமான அளவில் உயா்ந்துள்ளது. அதேபோன்று, தொலைத்தொடா்பு, சில்லறை வா்த்தகம் மூலமாக கிடைத்த வருவாயும் சிறப்பான அளவில் ஏற்றம் கண்டதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com