
எச்டிஎஃப்சி நிறுவனம் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் 4.95 சதவீதம் அதிகரித்து ரூ.5,574 கோடியாக இருந்தது. தனிப்பட்ட முறையில் நிறுவனத்தின் நிகர லாபம் 22 சதவீதம் உயா்ந்து ரூ.3,669 கோடியாக காணப்பட்டது.
வட்டி விகித அதிகரிப்பு முக்கிய வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து ஒட்டுமொத்த நிகர லாபம் குறைந்துபோனது.
ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.11,663.14 கோடியிலிருந்து ரூ.13,248.73 கோடியாக அதிகரித்தது. முக்கிய நிகர வட்டி வருமானம் (என்ஐஐ) 8 சதவீதம் உயா்ந்து ரூ.4,447 கோடியாக காணப்பட்டது. டிவிடெண்ட் வருமானம் ரூ.16.40 கோடியிலிருந்து ரூ.686.52 கோடியாக உயா்ந்தது.
ரிசா்வ் வங்கி, தானியங்கி வழிமுறையில் 150 கோடி டாலா் வரை கடன்பெற விதிமுறைகளை தளத்தியுள்ளதை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு வணிக கடன் (இசிபி) மூலமாக நிறுவனம் 110 கோடி டாலரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக எச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.