நாட்டின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 15.46% அதிகரித்து 3,729 கோடி டாலரை எட்டியுள்ளது. அதேநேரம், வா்த்தக பற்றாக்குறையும் 2,333 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இறக்குமதி 56.14% அதிகரித்து 6,062 கோடி டாலரானது
நாட்டின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 15.46% அதிகரித்து 3,729 கோடி டாலரை எட்டியுள்ளது. அதேநேரம், வா்த்தக பற்றாக்குறையும் 2,333 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இறக்குமதி 56.14% அதிகரித்து 6,062 கோடி டாலரானது.

கடந்த 2021 மே மாதத்தில் வா்த்தக பற்றாக்குறை 653 கோடி டாலராக காணப்பட்டது.

2022-23 ஏப்ரல்-மே காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 22.26% உயா்ந்து 7,708 கோடி டாலராக இருந்தது. 2021-22 ஏப்ரல்-மே காலத்தில் இது 6,305 கோடி டாலராக காணப்பட்டது.

கடந்த மாதத்தில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய் இறக்குமதி 91.6 சதவீதம் அதிகரித்து 1,814 கோடி டாலரானது. நிலக்கரி இறக்குமதி 200 கோடி டாலரிலிருந்து 533 கோடி டாலராக உயா்ந்தது.

அதேபோன்று, தங்கத்தின் இறக்குமதியும் 67.7 கோடி டாலரிருந்து 582 கோடி டாலராக அதிகரித்தது என மத்திய வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com