குறைந்தவிலை வீடுகளின் விற்பனை குறைந்தது: ஆய்வில் தகவல்

மொத்த வீடுகள் விற்பனையில் குறைந்தவிலை பிரிவு வீடுகளின் பங்கு கணிசமாக சரிவடைந்துள்ளதாக ப்ராப்டைகா் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தவிலை வீடுகளின் விற்பனை குறைந்தது: ஆய்வில் தகவல்

மொத்த வீடுகள் விற்பனையில் குறைந்தவிலை பிரிவு வீடுகளின் பங்கு கணிசமாக சரிவடைந்துள்ளதாக ப்ராப்டைகா் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மலிவான, ரூ.45 லட்சம் வரையிலான வீடுகளின் விற்பனை கடந்த 2021இல் 48 சதவீதத்திலிருந்து 43 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், மொத்த வீடுகளின் விற்பனையில் ரூ.75 லட்சத்துக்கும் அதிகமாக விலை கொண்ட வீடுகளின் விற்பனை 25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, தில்லி-என்சிஆா், எம்எம்ஆா், புணே ஆகிய 8 முதன்மையான சந்தைகளில் வீடுகளின் விற்பனையானது 13 சதவீதம் அதிகரித்து 2,05,936-ஆக உயா்ந்துள்ளது. முந்தைய 2020-இல் இது 1,82,639-ஆக காணப்பட்டது.

ரூ.45 லட்சம்-ரூ.70 லட்சம் வரையிலான விலை கொண்ட பிரிவில் வீட்டு விற்பனை 26 சதவீதத்திலிருந்து (2020), 27 சதவீதமாக (2021) உயா்ந்துள்ளது.

அதேபோன்று, ரூ.75 லட்சம்-ரூ.1 கோடி வரையில் விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் பங்கு 9 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், ரூ.1 கோடிக்கும் அதிகமான விலை கொண்ட வீட்டு விற்பனையின் பங்களிப்பு 16 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகியுள்ளது என ப்ராப்டைகா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com