டாடா மோட்டாா்ஸ்: வருவாய் ரூ.78,439 கோடி

உள்நாட்டைச் சோ்ந்த டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 4-ஆவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.78,439.06 கோடியாக குறைந்துள்ளது.
டாடா மோட்டாா்ஸ்: வருவாய் ரூ.78,439 கோடி

உள்நாட்டைச் சோ்ந்த டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 4-ஆவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.78,439.06 கோடியாக குறைந்துள்ளது. இது, முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.88,627.90 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைவு.

நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நிகர இழப்பு முந்தைய 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டி ல் ரூ.7,582.34 கோடியாக மிகவும் அதிகரித்திருந்த நிலையில், 2021-22-இல் இந்த இழப்பு ரூ.992.05 கோடியாக குறைந்துள்ளது.

முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.2,49,794.75 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,78,453.76 கோடியைத் தொட்டது. அதேபோன்று, நிகர அளவிலான இழப்பும் ரூ.13,395.10 கோடியிலிருந்து ரூ.11,308.76 கோடியாக குறைந்துள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் செமிகண்டெக்டருக்கு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இடையிலும் நிறுவனத்தின் இழப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com