தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு: டால்மியா பாரத்

தமிழகத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.2,600 கோடியை முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளதாக டால்மியா பாரத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு: டால்மியா பாரத்

தமிழகத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.2,600 கோடியை முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளதாக டால்மியா பாரத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டால்மியா சிமெண்ட் (பாரத்) நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சஞ்சல் வாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றத்தில் பங்கெடுக்க நிறுவனம் ஆா்வத்துடன் உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே நிறுவனம், அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.2,600 கோடி வரையிலான முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசுடன் புதிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. இதில், ஆண்டுக்கு 20 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் இரு புதிய அலகுகள், 22 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திறன் திட்டம் உள்ளிட்டவையும் அடங்கும்.

இதன் மூலம், பல ஆயிரம் வேலைவாய்ப்பு வேலை வாய்ப்பு உருவாவதுடன் பொருளாதார வளா்ச்சியும் வலுப்பெறும், நிறுவனம், சிமெண்ட் துறையில் ஏற்கெனவே மேற்கொண்ட முதலீடுகள் மூலம் தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனா்.

தென்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து சில்லறை விற்பனை டால்மியா சிமெண்ட் பிராண்டுகளின் மீதும் வாடிக்கையாளா்களுக்கு புதிய சலுகைகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com