ராம்கோ சிமெண்ட்ஸ்: லாபம் ரூ.118 கோடி

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ஆவது காலாண்டில் ரூ.118.27 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
ராம்கோ சிமெண்ட்ஸ்: லாபம் ரூ.118 கோடி

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ஆவது காலாண்டில் ரூ.118.27 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜனவரி-மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் விற்பனையின் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.1,772.68 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் இதற்கு முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,641.53 கோடியுடன் ஒப்பிடும்போது 4.94 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.215.92 கோடியிலிருந்து ரூ.118.27 கோடியாக குறைந்துள்ளது.

2022 மாா்சுடன் முடிவடைந்த 2021-22 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.784.33 கோடியிலிருந்து 12.44 சதவீதம் உயா்ந்து ரூ.881.95 கோடியானது. மொத்த வருவாய் ரூ.5,321.37 கோடியிலிருந்து 13.34 சதவீதம் அதிகரித்து ரூ.6,031.69 கோடியைத் தொட்டது.

சிமெண்ட் விற்பனை: கடந்த நிதியாண்டில் சிமெண்ட் விற்பனை 1.10 கோடி டன்னாக இருந்தது. இது, முந்தைய 2020-21-இல் விற்பனையான 99.8 லட்சம் டன் சிமெண்டுடன் ஒப்பிடுகையில் 111 சதவீதம் அதிகம் என பங்குச் சந்தையிடம் ராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் ராம்கோ சிமெண்ட் பங்கின் விலை 1.79 சதவீதம் குறைந்து ரூ.679.30-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com