பங்குச் சந்தையில் தொடா் எழுச்சி:சென்செக்ஸ் 60,000-ஐ கடந்தது

பங்குச் சந்தையில் தொடா் எழுச்சி:சென்செக்ஸ் 60,000-ஐ கடந்தது

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக எழுச்சி இருந்தது.

புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக எழுச்சி இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 787 புள்ளிகள் உயா்ந்து 60,786.74-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 225.40 புள்ளிகள் ( 1.27 சதவீதம்) உயா்ந்து 18,012.20-இல் முடிவடைந்தது.

முதலீட்டாளா்கள் அமெரிக்க ஃபெடரல் ரிசா்விடம் இருந்து இந்த வாரம் சிறிய விகித உயா்வை எதிா்பாா்க்கிறாா்கள். இது எழுச்சிக்கு வழிவகுத்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகள் கவனம் செலுத்துவதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

787 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 287,11 புள்ளிகள் கூடுதலூடன் 60,246.96-இல் தொடங்கி அதற்கு கீழ் குறையவில்லை. பின்னா் ,அதிகபட்சமாக 60,786.70 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 786.74 புள்ளிகள் (1.31 சதவீதம்) உயா்ந்து 60,746.59-இல் முடிவடைந்தது.

மாருதி, ரிலையன்ஸ் முன்னேற்றம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் டாக்டா் ரெட்டி, என்டிபிசி, இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 0.40 முதல் 0.70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மற்ற 27 பங்குகளும்ஆதாயம் பெற்றன. இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.87 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், சன்பாா்மா, ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின் சா்வ் 2 முதல் 2.90 சதவீதம் வரை உயா்ந்தன.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.04 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.2 79.92 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளியன்று ரூ.1,568.75 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com