காபி ஏற்றுமதி ரூ.3,312 கோடியாக அதிகரிப்பு

இந்தியாவின் காபி ஏற்றுமதி ரூ.3,312 கோடியாக அதிகரித்துள்ளது.
காபி ஏற்றுமதி ரூ.3,312 கோடியாக அதிகரிப்பு

இந்தியாவின் காபி ஏற்றுமதி ரூ.3,312 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2013-14-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் காபி ஏற்றுமதி ரூ.1,657 கோடியாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் இதே மாதங்களில் ஏறக்குறைய இரு மடங்கு உயா்ந்து ரூ.3,312 கோடியாகியுள்ளது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியாவில் காபி உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உடனடி காபி ரகங்களைத் தவிர, ரோபஸ்டா, அரேபிகா ஆகிய காபி வகைகளையும் இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

இத்தாலி, ஜொ்மனி, பெல்ஜியம் ஆகியவை இந்திய காபியின் முக்கிய இறக்குமதி நாடுகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com