சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்கு வர்த்தகத்தில் தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 212 புள்ளிகள் உயர்வு!

மும்பை: இன்றைய பங்கு வர்த்தகத்தில் தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.

30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் 212.88 புள்ளிகள் உயர்ந்து 59,756.84இல் நிலைபெற்றது. பகலில், இது 415.98 புள்ளிகள் உயர்ந்து 59,959.94-ஆக இருந்தது.

இதே வரிசையில், தேசிய பங்குச் சந்தை - நிஃப்டி 80.60 புள்ளிகள் உயர்ந்து 17,736.95-ல் முடிவடைந்தது.

30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில், டாடா ஸ்டீல், பவர் கிரிட், சன் பார்மா, பார்தி ஏர்டெல், டைட்டன், ஆக்சிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா மற்றும் நெஸ்லே ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.

ஆசியாவில் சியோல் மற்றும் ஹாங்காங்கில் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன, அதே நேரத்தில் டோக்கியோ மற்றும் ஷாங்காய் சரிந்து முடிந்தது.

சர்வதேச கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.13 சதவீதம் உயர்ந்து 95.79 அமெரிக்க டாலராக இருந்தது. அதே வேளையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாயன்று ரூ.247.01 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று சென்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com