
புதுதில்லி: ஹர்ஷா என்ஜினீயர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று 47 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது. வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்நிறுவனத்தின் பங்குகள் 34 ரூபாய் உயர்ந்து, 444 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைய காலை வர்த்தகத்தில் 59.87 சதவீதம் உயர்ந்து ரூ.527.60 ஆக இருந்த நிலையில், மாலையில் ரூ.485.90 ஆக வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையில், ஹர்ஷா என்ஜினீயர்ஸ் பங்குகள் 36.36 சதவீதம் உயர்ந்து, ரூ.450.00க்கு வர்த்தகமாகியது. வர்த்தகத்தில் இறுதியில் 46.27 சதவீதம் உயர்ந்து ரூ.482.70க்கு முடிந்தது. பங்குகளின் அளவின் அடிப்படையில், நிறுவனத்தின் 24.98 லட்சம் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகமானது. அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் 3.61 கோடி பங்குகள் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,423.83 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G