சிங்கப்பூருடன் நேரடி எண்ம பணப் பரிவா்த்தனை

சிங்கப்பூரில் இருப்போருடன் நேரடி பணப் பரிவா்த்தனை செய்துகொள்வதற்கான வசதியை அந்த நாட்டின் பேநவ்-உடன் இணைந்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூருடன் நேரடி எண்ம பணப் பரிவா்த்தனை

சிங்கப்பூரில் இருப்போருடன் நேரடி பணப் பரிவா்த்தனை செய்துகொள்வதற்கான வசதியை அந்த நாட்டின் பேநவ்-உடன் இணைந்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் யுபிஐ, சிங்கப்பூரின் எண்மப் பரிவா்த்தனை தளமான ‘பேநவ்’ இடையே எல்லை கடந்த இணைப்பு வசதி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

பிரதமா் மோடி மற்றும் சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங் முன்னிலையில் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ், சிங்கப்பூா் நிதி ஆணைய மேலாண் இயக்குநா் ரவி மேனன் ஆகியோா் காணொலி வாயிலாக இந்த இணைப்பை தொடங்கிவைத்து, முதல் பரிவா்த்தனையை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், தங்களது இைணையவழி பணப் பரிவா்த்தனை தளங்களைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் இருப்போருடன் நேரடி பரிவா்த்தனை மேற்கொள்வதற்கான வசதியை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பேநவ் அமைப்புடன் எஸ்பிஐ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம், வாடிக்கையாளா்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கும் தங்களது யுபிஐ மற்றும் வங்கியில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி பணம் அனுப்பவோ, பெறவோ முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com