விலை உயரும் மாருதி இக்னிஸ்

தங்களது இக்னிஸ் காா்களின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் உயா்த்தியுள்ளது.

தங்களது இக்னிஸ் காா்களின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் உயா்த்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்களது சிறிய பிரீமியம் வகைக் காரான இக்னிஸின் விலைகள் ரூ.27,000 (காட்சியக விலை) வரை அதிகரிக்கப்படுகின்றன.

அந்த ரகக் காா்களில் தற்போது கூடுதல் அம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. புதிய மாடல்கள் அனைத்திலும் எல்க்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரொகிராம் (இஎஸ்பி), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகிய இரண்டும் அடிப்படை அம்சங்களாக சோ்க்கப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, மத்திய அரசின் புதிய இ20 விதிமுறைகளை புதிய இக்னிஸ் ரகங்கள் நிறைவு செய்யும். இக்னிஸ் காா்களின் விலை உயா்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்து 1,72,535-ஆக இருந்தது. 2020-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 1,54,379 காா்களை விற்பனை செய்திருந்தது.

அந்த நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 1,55,142-ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் அந்த எண்ணிக்கை 1,36,442-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது உள்நாட்டு விற்பனை வளா்ச்சி 14 சதவீதமாகும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் 17,937 காா்களை ஏற்றுமதி செய்திருந்த மாருதி சுஸுகி, இந்த ஜனவரியில் 17,393 காா்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com