மாருதி சுஸுகி உற்பத்தி 18 % குறைவு!

மாருதி சுஸுகி இந்தியாவின் உற்பத்தி டிசம்பர் 2022ல் 17.96 சதவீதம் குறைந்து 1,24,722 யூனிட்டுகளாக இருந்தது என்று நிறுவனத்தின் ஒழுங்குமுறை தாக்கல் செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
மாருதி சுஸுகி உற்பத்தி 18 % குறைவு!

புதுதில்லி: மாருதி சுஸுகி இந்தியாவின் உற்பத்தி டிசம்பர் 2022ல் 17.96 சதவீதம் குறைந்து 1,24,722 யூனிட்டுகளாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி 1,52,029 யூனிட்களாக இருந்தது. ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்-ஆர் போன்ற மாடல்களை உள்ளடக்கிய மினி கார்கள் மற்றும் சிறிய பிரிவுகளின் உற்பத்தி, 2021 டிசம்பரில் 1,06,090 யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் 83,753 யூனிட்களாக குறைந்துள்ளது.

பிரெஸ்ஸா, எர்டிகா, ஜிம்னி, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்எல்-6 உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தி, முந்தைய ஆண்டின் 31,794 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 27,303 யூனிட்டுகளாக குறைந்துள்ளது.

இலகு ரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் உற்பத்தி டிசம்பர் 2021ல் 3,262 யூனிட்களில் இருந்து தற்போது 587 யூனிட்டுகளாக உள்ளது. 

மாருதி சுஸுகி இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த நிர்வாக அதிகாரி ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, மாருதி நிறுவனமானது தனது முந்தைய இருப்புகளை ஜனவரி மாதம் முதல் குறைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com