இந்திய ஸ்மார்ட்போன்களுக்கான மிகப்பெரிய ஏற்றுமதி இலக்கு அமெரிக்கா: மத்திய அரசு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையான மாதங்களில் இந்தியா ரூ.2.43 கோடி டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையான மாதங்களில் இந்தியா ரூ.2.43 கோடி டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான ஸ்மார்ட்போன் ஏற்றுமதி இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் பல மடங்கு உயர்ந்து ரூ.81.249 கோடி டாலராக உள்ளது. இது 2022-23 ஏப்ரல் முதல் மே வரையான மாதங்களில் ரூ.9.22 கோடி டாலராக இருந்தது என்று வர்த்தக அமைச்சகத்தின் தரவு மூலம் தெரியவந்துள்ளது.

மதிப்பின் அடிப்படையில் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் (ரூ.48.452 கோடி டாலர்), நெதர்லாந்து (ரூ.20.5 கோடி டாலர்), இங்கிலாந்து (ரூ.15.133 கோடி டாலர்), இத்தாலி (ரூ.13.657 கோடி  டாலர்), செக் குடியரசு (ரூ.11.55 கோடி டாலர்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மதிப்பு ரூ.1,095 கோடி டாலராகும்.

2023-24ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 157.82 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஐபோன் உற்பத்தியாளரான ஆப்பிள் ஸ்மார்ட்போன் உள்நாட்டு உற்பத்தியில் நுழைந்த பிறகு, ஸ்மார்ட்போன்களுக்கான முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com