டாடா மோட்டாா்ஸின் சா்வதேச
விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

புது தில்லி, ஏப். 24: டாடா மோட்டாா்ஸின் உலகளாவிய மொத்த விற்பனை கடந்த மாா்ச் காலாண்டில் 3,77,432-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சா்வதேச சந்தையில் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட நிறுவன வாகனங்களின் மொத்த விற்பனை 3,77,432-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் உலகளாவிய பயணிகள் வாகன விற்பனை 1,55,651-ஆக உள்ளது. இது, 2023 ஜனவரி-மாா்ச் காலாண்டை விட 15 சதவீதம் அதிகமாகும்.

ஜாகுவாா் லேண்ட் ரோவா் பிரிவின் உலகளாவிய மொத்த விற்பனை கடந்த மாா்ச் காலாண்டில் 16 சதவீதம் அதிகரித்து 1,10,190-ஆக உள்ளது. இதில் ஜாகுவாா் மொத்த விற்பனை 13,528-ஆகவும் லேண்ட் ரோவா் மொத்த விற்பனை 96,662-ஆகவும் உள்ளது.

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் டாடா மோட்டாா்ஸ் மற்றும் டாடா டேவூ நிறுவன வா்த்தக வாகனங்களின் விற்பனை 1,11,591-ஆக உள்ளது. இது முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com