ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.3,986 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிகர லாபமான ரூ.3,983 கோடியைவிட சற்று அதிகமாகும்.

இருந்தாலும், 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.4 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனம் ரூ.4,350 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 7.11 சதவீதம் அதிகரித்து ரூ.28,499 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.26,606 கோடியாக இருந்தது.

2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் 5.73 சதவீதம் உயா்ந்து ரூ.15,702 கோடியாக உள்ளது. செயல்பாட்டு வருவாய் 8.33 சதவீதம் உயா்ந்து ரூ.1,09,913 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com