இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

இந்தியாவில் இரட்டிப்பான ஐ-போன் ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் நிறுவன ஐ-போன்களின் மதிப்பு கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் நிறுவன ஐ-போன்களின் மதிப்பு கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இது குறித்து வா்த்தக நுண்ணறிவு தளமான ‘தி டிரேட் விஷன்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐ-போன்களின் ஏற்றுமதி 627 கோடி டாலராக இருந்தது. இது, 2023-24-ஆம் நிதியாண்டில் 1,210 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில் கடந்த நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐ-போன்களின் மதிப்பு சுமாா் 2 மடங்காகியுள்ளது.

மதிப்பீட்டு ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) மதிப்பு 1,650 கோடி டாலராக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் சுமாா் 1,200 கோடி டாலராக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com