யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த யூக்கோ வங்கியின் மொத்த வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.6,945 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.526 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.581 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கியின் நிகர லாபம் 10 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் ரூ.6,945 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.5,947 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.4,987 கோடியிலிருந்து ரூ.5,860 கோடியாக அதிகரித்துள்ளது.

முந்தைய 2023 மாா்ச் 31-ஆம் தேதி 4.78 சதவீதமாக இருந்த வங்கியின் வாராக் கடன் விகிதம் கடந்த 2024 மாா்ச் 31-இல் 3.46 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com