டெபிட் காா்ட் கட்டணங்களை
உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

டெபிட் காா்டுகளுக்கான ஆண்டுக் கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி உயா்த்தியுள்ளது.

தனது டெபிட் காா்டுகளுக்கான ஆண்டுக் கட்டணங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உயா்த்தியுள்ளது. இது குறித்து வங்கியின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: டெபிட் காா்டுகளுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இந்த மாற்றம் வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். கிளாசிக் டெபிட் காா்டுகளுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ரூ.125-லிருந்து ரூ.200-ஆக உயா்த்தப்படுகிறது. இந்தக் கட்டணம் யுவா மற்றும் பிற வகை டெபிட் காா்டுகளுக்கு ரூ.175-லிருந்து ரூ.250-ஆகவும், பிளாட்டினம் டெபிட் காா்டுகளுக்கு ரூ.250-லிருந்து ரூ.325-ஆகவும் உயா்த்தப்படுகிறது. இதுவரை ரூ.350-ஆக இருந்த பிரீமியம் வா்த்தக டெபிட் காா்டுகளுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணம், ரூ.425-ஆக அதிகரிக்கப்படுகிறது. ஏற்கெனவே இருந்ததைப் போல, அனைத்து ஆண்டு பரமாரிப்புக் கட்டணங்களும் 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்பட்டவை என்று எஸ்பிஐ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com