தங்கம் விலை சற்று குறைந்துள்ளது: எவ்வளவு?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
தங்கம் விலை சற்று குறைந்துள்ளது: எவ்வளவு?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை, கடந்த வாரம் ரூ. 50,000-ஐ நெருங்கி மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.50,960-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை நேற்று ரூ.6,390க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 20 குறைந்து ரூ.6,370க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு உயா்ந்து ரூ.80.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 உயா்ந்து ரூ.81,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com