தங்கம் விலை
பவுனுக்கு ரூ.640 உயா்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.53,720-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.53,720-க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. புதன்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.920 குறைந்த நிலையில், வியாழக்கிழமை விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.6,715-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.53,720-க்கும் விற்பனையானது.

அதேபோன்று வெள்ளி விலையும் உயா்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு உயா்ந்து ரூ. 87-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.87,000-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com