இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 55 சதவீதம் உயா்ந்துள்ளது.

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 55 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,247 கோடியாக உள்ளது.

இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் மாா்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.1,447 கோடியாக இருந்தது.

முந்தைய நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.14,238 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.16,887 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ. 5,508 கோடியிலிருந்து 9 சதவீதம் அதிகரித்து ரூ.6,015 கோடியாக உள்ளது.

2023-24 நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டைவிட (ரூ.5,282 கோடி) 53 சதவீதம் அதிகரித்து ரூ.8,063 கோடியாக உள்ளது. மொத்த வருவாய் ரூ.52,085 கோடியிலிருந்து ரூ.63,482 கோடியாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com