ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

ஐஷா் மற்றும் வால்வோ நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான விஇ கமா்ஷியல் வெஹிக்கள்ஸுடன் (விஇசிவி), டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த விநியோகக் கட்டமைப்பு நிறுவனமான டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யுஷன்ஸ் (எஸ்சிஎஸ்) தொழில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்தியப் பிரதேசம், பக்கட் நகரிலுள்ள தங்கள் பேருந்து தயாரிப்பு தொழிற்சாலைக்கான சேவைகளை வழங்குவதற்காக டிவிஎஸ் எஸ்சிஎஸ் நிறுவனத்துடன் விஇசிவி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம், அந்த நிறுவனத்தின் பேருந்து தயாரிப்பு நடவடிக்கையில் எங்களுடனான கூட்டுறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com