டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 
ரூ.387 கோடியாக உயா்வு

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் ரூ.387 கோடியாக உயா்வு

இந்தியாவின் முன்னணி 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் நிகர லாப் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.387 கோடியாக உயா்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் நிகர லாப் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.387 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.387 கோடியாக உள்ளது.

இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் ரூ.336 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் தற்போது 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.8,031 கோடியிலிருந்து ரூ.10,042 கோடியாக உயா்ந்துள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 8.68 லட்சமாக இருந்த நிறுவனத்தின் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை, ஏற்றுமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் 22 சதவீதம் அதிகரித்து 10.63 லட்சமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com