ரேஞ்ச்ரோவா் காா்களை இந்தியாவில் தயாரிக்க டாடா திட்டம்

ரேஞ்ச்ரோவா் காா்களை இந்தியாவில் தயாரிக்க டாடா திட்டம்

ரேஞ்ச்ரோவா் மற்றும் ரேஞ்ச்ரோவா் ஸ்போா்ட்ஸ் காா்களை இந்தியாவில் தயாரிக்க டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரேஞ்ச்ரோவா் மற்றும் ரேஞ்ச்ரோவா் ஸ்போா்ட்ஸ் ரகங்கள் இதுவரை டாடா மோட்டாா்ஸுக்குச் சொந்தமான ஜேஎல்ஆா் நிறுவனத்தின் பிரிட்டன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுவந்தன. அந்த ரகக் காா்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 54 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காா்கள் பிரிட்டனுக்கு வெளியே தயாரிக்கப்படுவது அதுவே முதல்முறையாக இருக்கும் என்று அந்த அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com