
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா்கள் தொடா்ந்து முதலிடம் வகிக்கின்றனா்.
இது குறித்து அந்த நாட்டு சுற்றுலாத் துறை செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு 1,98,235 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,64,609-ஆக இருந்தது.
அந்த மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிகபட்சமாக 46,473 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் இருந்து 17,764 பயணிகள் சுற்றுலா வந்துள்ளனா். ஜொ்மனியில் இருந்து 12,500 போ் வந்துள்ளனா்.
சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பலா் சுற்றுலா வந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.