பெய்ஜிங்: தைவான் நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் ‘போயிங்’, ‘லாக்ஹீட் மாா்ட்டின்’ உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷாவ் லிஜியான் திங்கள்கிழமை கூறுகையில், ‘தேசிய நலனை பாதுகாக்கும் நோக்கில், தைவானுக்கு ஆயுத விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
எனினும் அந்த நிறுவனங்களுக்கு எப்போது, எந்த வகையான அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து அவா் தெரிவிக்கவில்லை.
கடந்த 1949-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை தூதரக ரீதியில் எந்த உறவும் இல்லை. எனினும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் என்று கூறி வரும் சீன அரசு, அதன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.