சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

சீனாவின் நெருக்கடியால் உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக முடியாமல் தவிக்கும் தைவான்

உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினராக தைவானை அனுமதிக்க பல நாடுகள் விருப்பம் தெரிவித்தும் சீனாவின் நெருக்கடியால் உலக சுகாதார கூட்டத்தில்   தைவான் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினராக தைவானை அனுமதிக்க பல நாடுகள் விருப்பம் தெரிவித்தும் சீனாவின் நெருக்கடியால் உலக சுகாதார கூட்டத்தில் தைவான் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தைவானை உலக சுகாராத நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அனுமதிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவான் சீனாவின் ஒரு பகுதி எனவும், தைவான் ஒரு தனி நாடு அல்ல எனவும் சீனா கூறி வருகிறது. 

உலக நாடுகள் கரோனா பேராபத்திற்கு பிறகு தைவான் உலக சுகாதார நிறுவனத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற ஆதரவினை வலுப்படுத்தியது. உலக சுகாதார நிறுவனத்தில் தைவான் இணைக்கப்படுவது குறித்து அமெரிக்க செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த வாரம் கூறியதாவது, உலகம் கரோனா எனும் பேராபத்திற்கு எதிராகப் போராடி வருகிறது. இந்தச் சூழலில் தைவான் முக்கிய சர்வதேச அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தில் சேர்க்கப்படாமல் உள்ளது. இது தைவானின் தரத்தைக் குறைக்கிறது” என்றார்.

75ஆவது சுகாதாரக் கூட்டத்தில் தைவானை உலக சுகாதார நிறுவனத்தில் நிரந்தர பார்வையாளராக அறிவிக்க பெலிஸ், எஸ்வதினி, ஹைதி, துவாலு உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

கரோனா பேராபத்துக் காலத்தை தைவான் திறம்பட கையாண்டுள்ளது. 2.3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தீவு நாடான தைவானில் கரோனாவின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை 1,300-க்கும் சற்று அதிகமாக மட்டுமே இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 1972ஆம் ஆண்டு தைவான் உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. அதன் பின் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இருந்த காலக்கட்டமான 2009 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் தைவான் உலக சுகாதார நிறுவனத்தின் பார்வையாளராக இருந்து ஆண்டுக் கூட்டங்களில் கலந்து கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.