ஸ்காட்லாந்தில் பதிவான முதல் குரங்கு அம்மை பாதிப்பு

ஸ்காட்லாந்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று இன்று (திங்கள்கிழமை)  உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்காட்லாந்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று இன்று (திங்கள்கிழமை)  உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் சிலவும் புதிதாக பரவி வரும் இந்த குரங்கு அம்மையால் சிக்கலான சூழலை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஸ்காட்லாந்து அந்த நாட்டின் முதல் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவரைக் கண்டறிந்துள்ளது. அவர் தனிமைப் படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக ஸ்காட்லாந்து பொது சுகாதார இயக்குநர் நிக் பின் கூறியதாவது, “ நாங்கள் ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டன் அரசுடன் இணைந்து இந்த ஸ்காட்லாந்தின் இந்த முதல் குரங்கு அம்மை உருவான இடம் குறித்து சோதனை மேற்கொள்ள உள்ளோம். தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com