இன்று காலை நிருபர்கள் காந்திஜியை பேட்டி கண்டனர். அப்போது அவர்கள் கேள்விகளுக்கு காந்திஜி பதிலளிக்கையில் தாம் ராஜ்கோட்டை அடைந்தவுடன் மேலும் சமரசம் பேசப்போவதாகக் கூறினார்.
கே:- புதியஒளி பிரகாரம் நடக்கப்போவதாக தாங்கள் கூறினீர்கள், அதன் தாத்பர்யம் என்ன?
காந்திஜி:- இதன் பூர்ண தாத்பர்யம் என்னவென்பது எனக்கே தெரியாது. ஆயினும் புதிய ஒளி என்பது என்னவென்பதை லேசாக என்னுடைய ராஜ்கோட் அறிக்கையில் நான் விளக்க முயன்றுள்ளேன். அவ்வளவிலே தான் நிற்கிறேன்.
கே:- உங்களுடைய அடுத்த வேலை என்ன?
காந்திஜி:- என்னுடைய அடுத்த வேலை சகஜமாக சமரசப் பேச்சுக்கள் எத்துடன் நின்றதோ எங்கு நான் விட்டேனோ அதனைத் தொடர்வதாக இருக்கும். நான் ராஜ்கோட்டை விட்டுப் புறப்பட்ட பின்னர், இன்று வரை உள்ள இடைக்காலத்தில் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. உதாரணமாக ராஜ்கோட் சமஸ்தான ஜனங்கள் பிரதிநிதிகளும், தர்பாரும் ஒரு சீர்திருத்த திட்டம் பற்றி விவாதித்து வருகின்றனர். இது பிரஜா பரிஷத்தால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
கே:- ஜனங்களுக்கு நிறைய அதிகாரங்கள் கொடுப்பதாக உறுதி கூறி 1938 டிசம்பர் மாதம் 26-ம் தேதி ராஜ்கோட் தாகூர் சாயபு விடுத்த அறிக்கையை மீறுவதாகாதா இப்போது தர்பார் வீரவாலா கூறும் திட்டம்?
காந்திஜி:- ஆகாது. டிசம்பரில் வந்த அறிக்கைக்காக, தர்பார் வீரவாலா எதையும் இப்போது அளிக்கவில்லை. இது ஒரு சுயேச்சையான யோசனை. இந்த திட்டம் இப்போது இருதரப்பினரால் விவாதிக்கப்பட்டு வருவதால், இதில் ஒன்றும் வாக்குறுதியை மீறிய விஷயம் கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் விவாதத்திலிருக்கும் இத்திட்டத்தை அங்கீகரித்துவிட்டால் பிறகு இது பரஸ்பரம் செய்து கொண்ட ஒப்பந்தமாகும்.
தினமணி (11-05-1939)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்தது என்ன? கண்ணீருடன் பெண்கள்!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!

ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


