பஞ்சத்தைச் சமாளிக்க 8 அம்சத் திட்டம்

என்ன செய்ய வேண்டும்? என்ற மகுடத்தின் கீழ் பயமுறுத்திக் கொண்டிருக்கும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க 8 அம்சத்
பஞ்சத்தைச் சமாளிக்க 8 அம்சத் திட்டம்
Published on
Updated on
1 min read

என்ன செய்ய வேண்டும்? என்ற மகுடத்தின் கீழ் பயமுறுத்திக் கொண்டிருக்கும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க 8 அம்சத் திட்டத்தை விளக்கி மகாத்மா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தற்போதைய நிலைமையில் உணவு நெருக்கடி நிச்சயம். கீழ்க்கண்ட காரியங்களை உடனே செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் நமதுஆரோக்கியத்தின் அவசியத்திற்கேற்ப உணவு சம்பந்தமாக அன்றாடத் தேவைகளை குறைந்த பக்ஷமாக்கிக் கொள்ள வேண்டும். பால், தாவர நெய் பழங்கள் கிடைக்கும் நகரங்களிலுள்ளவர்கள் உணவு தானியங்களையும் பருப்பு வகைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும். அரிசியிலுள்ள சர்க்கரை சத்து காரட், காரட் இனத்தைச் சேர்ந்த பார்ஸ்னீப் கிழங்கு, உருளைக் கிழங்கு, ஆள்வள்ளிக் கிழங்கு, வாழைப்பழங்கள் முதலியவற்றிலிருந்தும் கிடைக்கும். தற்போதைய உணவிலிருந்து கிடைக்கும் தானியங்கள், பருப்புகளை நீக்கி அவைகளைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டுமென்பதே நோக்கம். காய்கறிகளையும் அனாவசியமாகச் சாப்பிடக்கூடாது.
ஏதாவது கொஞ்ச ஜல வசதியுள்ளவர்கள் ஒவ்வொருவரும் சொந்த உபயோகத்திற்கோ பொது உபயோகத்திற்கோ கொஞ்சமாவது உணவுக்குகந்தவைகளைப் பயிர் செய்ய வேண்டும். 
எல்லா பூந்தோட்டங்களையும் உணவுக்குகந்தவற்றைப் பயிரிடப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஸிவிலியன்களை மட்டும் உணவைக் குறைத்துக்கொள்ளச் சொல்லக் கூடாது. முக்கியமாக ராணுவத்தினரும் அதற்குச் சமமாகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் விதைகள், எண்ணெய்கள், பிண்ணாக்குகள், கொட்டைகள் முதலியவற்றின் ஏற்றுமதியை இதுவரை நிறுத்தாதிருந்தால் இனி அடியோடு நிறுத்திவிட வேண்டும்.
சாகுபடிக்காயிருந்தாலும் சரி, குடிதண்ணீர் வசதிக்காயிருந்தாலும் சரி, தேவையான இடங்களில் சாத்தியமானவரை சர்க்கார் ஆழமான கிணறுகள் தோண்ட வேண்டும்.

தினமணி (17-02-1946)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com