அட்டூழியங்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்

இன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி, பாகிஸ்தானின் அட்டூழியங்கள் பற்றிக் குறிப்பிட்டு பேசியதாவது:
அட்டூழியங்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்
Published on
Updated on
1 min read

இன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி, பாகிஸ்தானின் அட்டூழியங்கள் பற்றிக் குறிப்பிட்டு பேசியதாவது:

""கராச்சியில் சீக்கியர் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நிரபராதியான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டு சூறையாடப்பட்டனர். மற்றவர்கள் ஓட நேர்ந்தது. குஜராத்தில் ஓர் அகதி ரயில் தாக்கப்பட்டிருப்பதாக இப்பொழுது செய்தி கிடைத்திருக்கிறது. இந்த ரயிலில் முஸ்லிமல்லாத அகதிகள் வந்துகொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் ஏராளமான அகதிகள் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது எனக்கு பெரும் துயரம் அளிக்கிறது. இந்திய யூனியன் எவ்வளவு காலம் சகித்துக் கொண்டிருக்க முடியும்? என் உபவாசத்தை மீறி, ஹிந்து, சீக்கியரின் பொறுமையை நான் எவ்வளவு காலம் நம்பியிருக்க முடியும்? இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவர்கள் தங்கள் ஹிருதயத்தை பரிசுத்தம் செய்துகொண்டு, ஹிந்துக்களும், சீக்கியரும் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று அமைதியாக வாழும்படி செய்யும்வரை ஓய்வு ஒழிவு இன்றி உழைப்பதாக பிரதிக்ஞை செய்துகொள்ள வேண்டும்.

இந்தியா முழுமையிலும் ஆத்மசுத்தி இயக்கம் நடப்பதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது பாகிஸ்தானில் உள்ளவர்கள் பழைய தவறுகளை மறந்துவிடுவார்கள். பழைய வேற்றுமைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும். பாகிஸ்தானில் காயிதே ஆஜமின் உயிருக்கும் சொத்துக்கும் எவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறதோ அவ்வளவு பாதுகாப்பு மிகச் சிறியோருக்கும் கடையோருக்கும் கூட அளிக்கப்படும். இத்தகைய பாகிஸ்தான் அழியவே அழியாது. "பாகிஸ்தான் ஒரு பாவம்' என்று கூறியதற்காக பாகிஸ்தானில் இத்தகைய நிலை ஏற்படும்வரை நான் வருந்தவேண்டியதில்லை. அது உண்மையே என்று இப்பொழுது நான் நினைக்க வேண்டியிருக்கிறது.


தினமணி (15-01-1948)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com