16. இறைவனை நினைத்தால் சுகம்

எனது நண்பர் ஒருவர், ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அதன் ஆசிரியர் ‘எண்ணங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்
16. இறைவனை நினைத்தால் சுகம்
Updated on
3 min read

எனது நண்பர் ஒருவர், ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அதன் ஆசிரியர் ‘எண்ணங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் ஒரு பகுதியை படித்துப் பார்த்தேன். அதில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருந்தது. ‘எண்ணங்களை செயல்படுத்துங்கள். அதன் செயல்பாடுகள் தொடர்ந்து செய்யப்படும் போது அதுவே பழக்கமாகிறது. தொடர்ந்து கடைபிடிக்கப்படும் பழக்கங்கள் ஒருவருடைய குணங்களை தீர்மானிக்கிறது படித்துக் கொண்டிருந்த நண்பரிடம் கேட்டேன், ‘ஒரு செயல்பாட்டை பழக்கமாக்கி கொள்வது சரியா?’ இன்றைக்கு எனது மனத்தில் ஒரு எண்ணம் உருவாகிறது. இது சரி என்று மனத்தில் படுகிறது அதை நான் செயல்படுத்துகிறேன். இதையே நான் பழக்கமாக்கி கொண்டால் என்னவாகும்?” நாளைக்கே எனக்கு இதை விட சிறந்த எண்ணம் உருவாகிறது. அதை நான் செயல்பட வேண்டும் என்று விரும்ப வேண்டாமா? ‘இது தான் என் பழக்கம். இதை மாற்ற முடியுமா?’ எனவே எதையும் பழக்கமாக்கிக் கொள்ள கூடாது. நான் எப்போதும் வெள்ளை சட்டையே தான் போடுவேன். வெள்ளை பேண்ட் தான் போடுவேன். எனக்கு இது அடையாளமாகிவிட்டது.

மனத்தின் முரண்பாடு நோய்களுக்கு காரணம்

அதாவது ஊருக்கு காட்டவேண்டும் என்பதற்காக வெள்ளை உடை உடுத்துகிறேன். மனத்தில் ஒரு விருப்பம் இருக்கும் போது, பல்வேறு நிறங்களில் ஆடை அணிய வேண்டும் என்று ஆசை வருகிறது. ஆனால் ஊருக்காக வாழும் போது அதை செய்ய முடியவில்லை. மனத்தில் ஏற்படும் முரண்பாடுகளோடு வாழும் போது நோய் உண்டாகிறது. எத்தனையோ இடங்களில், வெள்ளை ஆடை உடுத்தி வந்த கன்னியாஸ்திரிகள், அவர்களுடைய விருப்பத்திற்காக அந்த திருச்சபைகள் பல்வேறு நிறங்களில் ஆடை அணிய அனுமதிக்கிறார்கள். மனதிற்கு திருப்தி இல்லாத வாழ்க்கை வாழும் போது நோய் உண்டாகிறது. எனவே எதையும் பழக்கமாக்கி கொள்ளக் கூடாது. இன்று என் மனம் ஒன்றை விரும்பலாம். நாளைக்கு இதை விட சிறப்பான ஒன்று வரும் போது அது செயல்பட வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

எண்ணம் செயல்படும்! செயல்படுத்த வேண்டாம்!

அந்த புத்தகத்தில் எண்ணத்தை செயல்படுத்துங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்னுடைய கேள்வி, ‘எண்ணத்தை செயல்படுத்த வேண்டுமா? அல்லது எண்ணமே செயல்படுமா?’ நீங்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்று என் மனம் விரும்பும் போது அந்த நல்ல எண்ணமே போதுமா? வேறு எதுவும் செய்ய வேண்டாமா? அந்த நல்ல எண்ணத்தின் காரணமாக நீங்கள் நல்லபடியாக வாழ்வீர்கள்.

மற்றவரை வெறுக்க வேண்டாம்

மாறாக, ஒருவன் நாசமாக போக வேண்டும் அல்லது ஒருவன் கெட்டுப் போக வேண்டும் என்று விரும்பும் போது அதுவே நடந்து விடுகிறது. இதுதான் நாம் மற்றவர்களுக்கு செய்யும் தீமை. நன்மையான எண்ணத்திற்கு எப்படி கூலி இருக்கிறதோ அதே போல தீமையான எண்ணத்திற்கும் தண்டனை இருக்கிறது. ‘என்னுடைய கடையில் நல்லபடியாக வியாபாரம் நடக்க வேண்டும். என் கடைக்கு வரும் எல்லோரும் திருப்தி அடைந்து செல்ல வேண்டும்’ அந்த எண்ணம் செயல்படும். நீங்கள் என்ன எண்ணத்தோடு பார்க்கிறீர்கள்? பேசுகிறீர்கள்? என்பதை நம்முடைய வாடிக்கையாளர்களும் புரிந்து கொள்வார்கள்.

நினைத்தால் சுகம் – இறைவனை நினைத்தால்

இறைவழி மருத்துவம் இது தான். உங்களிடம் வந்திருப்பவர் சுகமாக வேண்டும் என்ற எண்ணம் தான் சுகமாக்குகிறது. உங்களுடைய கையையும், காலையும் வைத்துக் கொண்டு ஊசியை போடுவதும், மாத்திரை கொடுப்பதும், அறுவை சிகிச்சை செய்வதும் தேவை இல்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பீர்கள். உங்கள் நண்பர் அவரது வீட்டில் இருப்பார். அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. தொலைபேசியில் நீங்கள் பேசினால் உங்கள் நண்பர் சொல்வார், ‘நான் உங்களைத் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். தொலைபேசியில் பேசலாம் என்று தோன்றியது’ என்று பதில் உரைப்பார்கள். போன் பண்ணும் முன் நீங்கள் அவரை நினைக்கும் போது அது அவரின் மனத்தில் போய் சென்றுவிடுகிறது. நம்முடைய மனது அவருடைய வீட்டுக்குச் சென்றுவிட்டது. அப்புறமாக இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இதெல்லாம் யாருடைய ஏற்பாடு? இறைவனுடைய ஏற்பாடு. இதை யாரும் மறுக்க முடியாது. இதெல்லாம் ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கும் உண்மைகள்.

வாழ்க்கை ஒரு கடல் பயணம்

மனிதனுடைய வாழ்க்கையே ஒரு கடற்பயணம். இறைவனுடைய கட்டளையாகக் கொண்டு அந்தப் பயணம் தொடர்கிறது. அதாவது மனிதனுடைய மனமானது கப்பல். இறைவன் என்ன உணர்த்துகிறானோ? என்ன விருப்பத்தை ஏற்று அந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்று அந்த மனம் விரும்பும் போது அந்த பயணம் அழகான முறையில், எளிதான முறையில் அமைகிறது.

ஆன்மாவின் கட்டளை

அந்த மனம் எப்போது உடைந்து விடுகிறதோ? விருப்பத்தை நீக்கி மனதை கசப்பாக்கி விடுகிறதோ அப்போது இனிமையான கடற்பயணமானது துயரமான கடற்பயணமாக மாறிவிடுகிறது. எனவே மனம் தான் வாழ்க்கை எனும் கப்பலை நடத்திச் செல்கிறது. எப்படி செல்ல வேண்டும் என்ற வழிகாட்டுதலையும், கட்டளையையும் ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்திருக்கிறார்களோ, அந்த ஆன்மாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மாவைத் தொலைத்து விடக் கூடாது. ஆன்மா புனிதமானது. அழகானது, தூய்மையானது. ஆன்மாவைத் தொலைத்துவிட்டு மனம் போன போக்கில் செயல்படக் கூடாது. அற்ப சுகங்களுக்காக ஆன்மாவைத் தொலைத்து விடக்கூடாது.

இப்போதுதான் உங்களை நினைத்தேன்

ஒருவர் தன்னுடைய வீட்டிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ரத்த அழுத்தம் 250 மி.மீ இருக்கிறது. மார்பு படபடக்கிறது. தலை வலிக்கிறது என்னால் உங்கள் இடத்திற்கு பிரயாணம் செய்து வரமுடியாத நிலையிலிருக்கிறேன். சென்னை குன்றத்தூரில் இருந்து பேசினார். இறைவனை நம்பி வாருங்கள் என்று சொன்னேன். வந்து சேர்ந்தார். அவரது தாயாரும் உடன் வந்திருந்தார். அப்பா இல்லை. வயது 30 ஐ தாண்டியிருக்கும். ஏன் திருமணம் செய்யவில்லை? என்று கேட்டேன். என்னுடைய வருமானத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினார். துணைவி வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா என்று கேட்டேன். ஆமாம் என்று கூறினார் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள். ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து மூன்று வேலை சாப்பாடு கொடுக்க வேண்டி இருக்கும். இறைவனுடைய வார்த்தை, ‘உணவளிக்க பொறுப்பேற்றுக்கொள்ளாத எந்த உயிரனமும் உலகில் இல்லை’ இறைவன் தான் படைத்த அனைத்து உயிரனத்திற்கும் அவனே உணவளிக்கிறான். நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்குத் தேவையான உணவை இறைவன் அதிகப்படுத்திக் கொடுக்கிறான். நான் குழந்தை பெற்றால் குழந்தைக்கு எப்படி உணவலிப்பது என்று கவலைப்படுகிறார்கள்.

எல்லோருக்கும் உணவளிக்க இறைவனே பொறுப்பேற்கிறான்

உணவளிப்பது உங்கள் வேலை அல்ல. அவரிடம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினேன். உங்கள் ஆன்மா உங்களுக்கு துணைவி வேண்டும் என்று அறிவிக்கிறது. உங்களது மனம் நிராகரிக்கிறது. மனத்தில் எழும் முரண்பாடு ரத்தக் கொதிப்பு நோயை உருவாக்குகிறது. என்னுடைய பிரார்த்தனை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பும் போது மயக்கமோ, மார்பு படப்படப்போ இல்லாமல் மன அமைதியோடு திரும்பிச் சென்றார். மனது கொதிக்கும் போது, ரத்தம் கொதிக்கும். அதை ரத்த அழுத்த நோயாக ஆக்கிவிட வேண்டாம். மருந்து, மாத்திரைகள் மனத்தை சுகப்படுத்த முடியாது.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com