17. இறைவழி மட்டுமே காக்கும்!

நம்மோடு வாழ்பவர்களில் பலர் கழுத்து வலியால் நீண்ட காலம் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறோம்.
17. இறைவழி மட்டுமே காக்கும்!
Updated on
3 min read

நம்மோடு வாழ்பவர்களில் பலர் கழுத்து வலியால் நீண்ட காலம் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கழுத்துவலி ஏற்பட்டவுடன் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். மாத்திரை சாப்பிட்டு குறையவில்லை என்றால் ஆயின்மெண்ட் அல்லது தைலம் தடவுவார்கள். அதன்பிறகு ஃபிஸியோதெரபி செய்தால் சரியாகுமென்று அந்த சிகிச்சையும் மேற்கொள்வார்கள். எலும்பு மருத்துவரிடம் செல்வார்கள். சிலர் நரம்பு ஸ்பெஷலிட்ஸ்களையும் பார்ப்பார்கள். இந்த சிகிச்சைகள் எல்லாம் பெரும்பாலும் பலனளிப்பதில்லை. கழுத்தை குனிந்து பார்க்க முடியாமல் கழுத்தை நிமிர்ந்து பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படும். வலது பக்கம், இடது பக்கம் குனிந்து பார்ப்பதையும் நிறுத்திக் கொள்வார்கள். கழுத்து ஒரு மரக்கட்டைப் போல ஆகிவிடும். எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார்கள். டாக்டர்கள் இதற்கு ஒரு பெயர் வைத்துவிடுவார்கள். Cervical Spondylitis என்று பெயர் சூட்டுவார்கள். இதே போன்று இடுப்பில் வலி இருந்தால் Lumbar Spondylitis என்று சொல்வார்கள். Cervical என்றால் கழுத்துப் பகுதி என்று அர்த்தம். அதாவது கழுத்து எலும்புகளில் பற்களில் காரை படிந்திருப்பது போல் படிந்திருக்கிறது என்று அர்த்தம். லம்பார் என்றால் இடுப்பு என்று அர்த்தம். ஆங்கிலத்தில் சொல்லும் போது ஏதோ ஒரு நோயை கண்டுபிடித்து விட்டது போல் மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

கழுத்துப் பகுதியில் கழுத்து எலும்பு இருக்கிறது. சதை இருக்கிறது. சதையையும், எலும்பையும் இணைக்கக் கூடிய தசை நார் இருக்கிறது. தசையை இயக்கக் கூடிய நரம்புகளும் இருக்கின்றன. இன்னும் ரத்தக் குழாய்களும் இருக்கின்றன.

கழுத்து வலிக்கு காரணம் கண்டுபிடிக்க முடியுமா?

கழுத்து வலிக்கு காரணம் கண்டுபிடிப்பதற்காக ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், எம் ஆர் ஐ என்று எல்லா பரிசோதனைகளும் செய்வார்கள். உண்மையில் மேற்சொன்ன எந்த பரிசோதனைகளும் நோய்க்கான காரணங்களை கண்டுபிடிக்க உதவி புரிவதில்லை. எக்ஸ்ரே பார்த்துவிட்டு எலும்புத் தேய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறுவதும் உண்மை அல்ல. மருத்துவர்கள் சொல்வதாக கூறப்படும் மாற்றங்கள் இதை விட எக்ஸ்ரேயில் அதிகமாக இருந்தும் கூட கழுத்து வலி ஏற்படுவதில்லை. எக்ஸ்ரே ரிப்போர்டை வைத்து உண்மையான காரணத்தை கண்டறிய முடியாது.

மாத்திரைகள், வெறும் வலி நிவாரண மாத்திரைகளே

எலும்பு தேய்வுக்காக மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மாத்திரைகள், வெறும் வலி நிவாரண மாத்திரைகளே. எலும்பில் காரை படிவதை எந்த மருந்தாலும் நீக்க முடியாது. ஃபிஸியோதெரபியும் நீக்க முடியாது. கழுத்து வலி உள்ளவர்களுக்கு தலைச் சுற்று மற்றும் மயக்கம் ஏற்படும். அதற்கு கழுத்தில் ஒரு பெல்டை மாட்டி விடுவார்கள். அந்த பெல்ட்டை மாட்டுவதினால் நோயாளிக்கு எந்த பலனும் இல்லை. அதே போல இடுப்பிலும் பெல்ட்டை மாட்டி விடுவார்கள். எத்தனை வருடம் இடுப்பில் பெல்ட்டை மாட்டினாலும் இடுப்பு வலி தீரப் போவதில்லை.

இறைவனிடம் திரும்ப வேண்டியவராக இருக்கிறோம்

உணவு தேவைக்கு அதிகமாக சாப்பிடும் போது அதாவது 4 இட்லி சாப்பிடுகிறோம். வயிறு நிரம்பி விட்டது. பசி அடங்கிவிட்டது. சட்னிக்காக 5வது இட்லி சாப்பிடும் போது கழுத்து வலி உண்டாகும். பசியே இல்லாமல் உணவு சாப்பிடும் போது கழுத்துவலி உண்டாகும். உடம்பில் கழிவுகள் நீங்காமல் இருக்கும் போது கழுத்து வலி உண்டாகும். இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் போனால் கழுத்து வலி உண்டாகும். மனம் கவலை அடைந்தாலும், கோபம் உண்டானாலும் கழுத்து வலி உண்டாகும். நான் தான் செய்து முடித்துவிட்டேன் என்று பெருமை கொண்டாலும் கழுத்து வலி உண்டாகும். அடுத்தவரை குறை சொல்லிக் கொண்டே இருந்தாலும் கழுத்து வலி உண்டாகும். கடன் வாங்கும் போது, வட்டிக் கொடுக்கும் போது கழுத்து வலி உண்டாகும். ஒழுக்கம் கெடும்போது கழுத்து வலி உண்டாகும்.

வாழ்க்கை துயரம் காரணம்

உடம்பை விட்டு வெளியேற வேண்டிய நீர், காற்று, மலக் கழிவுகள், உடலை விட்டு வெளியேறாமல் தங்க ஆரம்பிக்கும். இரவில் சரியான தூக்கம் வராது. கெட்ட கனவுகள் அதிகமாகும். பயமும் கவலையும் அதிகமாகும். வெறும் கழுத்து வலி என்று நினைக்க வேண்டாம். அமைதியான வாழ்க்கைப் பயணம் துயரம் தரும் வாழ்க்கையாக மாறூம்.

இறைவன் பக்கம் திரும்ப வேண்டியவர்கள், மருந்து மாத்திரைகளையும்,மருத்துவ உபகரணங்களையும் தேடி அலைவார்கள். கழுத்து வலி என்று ஆரம்பித்து உடலில் அத்தனை எலும்புகளும் வலிக்க ஆரம்பிக்கும்.

ரொமாட்டிசம் (Rheumatism) நோய் என்று பரவலாக பேசுவார்கள். Rheumatoid Arthritis, Ostea Arthritis, இன்னும் Gout என்றும் கூறுவதுண்டு. கை, கால் வலிக்காக விதவிதமான பெயர்கள் மருத்துவர்களால் கூறப்படுவது உண்டு. மேற்சொன்ன அனைத்து வலிகளுக்கும் வலி மாத்திரைகள் தான்.

மருந்துகளைச் சாப்பிட்டு நோய் குணமடையாமல் வாழ்க்கை வெறுத்துப் போய் வாழ்பவர்கள் ஏராளம் உண்டு. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் ஏராளம்.

மருத்துவ உலகம் கைவிட்டுவிட்டது

இறைவன் ஒருவனே. அவனைத் தவிர இறைவனில்லை. இறைவன் நம்மோடு இருக்கிறான். எவர், பொறுமையோடு, துன்பங்களை சகித்துக் கொண்டு, மருந்து மாத்திரிகைகளை விட்டும் விலகி, இறைவனை முழுமையாக நம்பி, உலகத்தைப் படைத்த அந்த மகா சக்தி, அந்த சக்தியால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்று உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மருந்து மாத்திரை இல்லாமல் நோய் குணமாகும்.

இந்த உலகத்தை, இந்த சூரியன், சந்திரன், இன்னும் எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் படைத்த இறைவன் அவன் தூணில் துரும்பில் இருப்பானா? அல்லது நம் மனத்தில் இருப்பானா?

நன்றாக நடந்து கொண்டிருந்த பெண்மணி வயது 35 இருக்கும். திடிரென்று நடக்க முடியாமல் போய்விட்டது. தாங்க முடியாத அளவிற்கு வலி.

பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான். என்னால் வலியை தாங்கிக் கொள்ள முடியாது. எத்தனை நாளைக்கு பொறுத்துத் தூங்க முடியாமல், கால்களால் நடக்க முடியாமல் சகோதரனும், தாயும் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு கை கால் வலி ஆரம்பித்து மூன்று வருடங்களாக நடக்கவே முடியாம்லும், கைகளை அசைக்க முடியாமலும் போய்விட்டது. பெண்ணின் கணவர் மனைவியை அழைத்துக் கொண்டு பிரபலமான மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். மூன்று வருடம் கழித்து மனைவியை விவாகரத்து செய்து விட்டார். டாக்டர்கள் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள், இதற்கு மேல் பெரிய சிகிச்சை எதுவும் செய்ய முடியாதென்று கூறிவிட்டார்கள்.

அந்தப் பெண்ணுக்கு நான் எந்த மாத்திரையும் கொடுக்கவில்லை. எவர் தவறை உணர்ந்து திருந்தி மன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களை இறைவன் மன்னிக்கிறான். அந்தப் பெண்ணுக்கு சுகமாக வேண்டும் என்ற என்னுடைய விருப்பம், பிரார்த்தனையால் அந்த பெண்மணி சொன்னது, ஏதாவது செய்யுங்க. ஊசியைப் போடுங்க. உடனே வலியை நிறுத்துங்கள் என்று சொல்பவர்கள் ஏராளம். அப்படி என்றால் இறைவன் எதற்கு இருக்கிறான். இந்த கழுத்து வலியைக் கூட அவனால் போக்க முடியாதா? இறைவனை நம்புகிறோம் ஆனால் சோதனை என்று வரும்போது அந்த நம்பிக்கையில் உறுதியாக இருப்பதில்லை. நம்முடைய தவறுகளுக்காகத்தான், அதற்குத் தண்டனையாகத் தான் நம்மை திருத்துவதற்காகத்தான், நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காகத்தான், நோய்கள் உருவாகின்றன.

மனிதன் நன்மைக்கு அவசரப்படுவது போன்றே தீமைக்கும் அவசரப்படுகின்றான்.

மாத்திரிகைகளால் சிறுநீரக செயலிழப்பு

ஒரு பெண்மணி, அவருக்கு 35 வயது இருக்கும். அவருக்கு கை, கால் வலி கடுமையாக வரும். மருத்துவமனைக்குப் போய் மாத்திரை, ஊசி போட்டுவிட்டு, வலி குறையவில்லை என்று என் மருத்துவமனைக்கு வருவார். மாத்திரை சீட்டைப் பார்த்தால், அந்த சீட்டில் ஸ்டிராய்டு மாத்திரை எழுதப்பட்டிருக்கும். ஸ்டிராய்டு மாத்திரைகள், சிறுநீரகத்தைப் பாதிக்கும். அந்த மாத்திரை வேண்டாம். அதைச் சாப்பிடாதீர்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால் அவர் வலி வந்தவுடன் எதாவது மருந்துவமனை, உடனே ஸ்டிராய்டு மருந்து என்று பல வருடங்கள் கடந்தன. 4,5 வருடங்கள் சிகிச்சை அளித்திருப்பேன். ஆனால் சொல்வதைக் கேட்க மாட்டார். என் மருத்துவமனைக்கு வரவில்லை.

வேதனையைப் பார்த்த பின்பு சிகிச்சை அளிக்க மனம் விரும்பவில்லை

பத்து வருடங்கள் கழித்து ஒரு நாள் ஒரு பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக எனக்கு அழைப்பு வந்தது. சென்று பார்த்தபோது அதே பெண்மணி. உடல், முகம் எல்லாம் வீங்கி சிறுநீரகம் வேலை செய்யாததால், நீர் பிரியாமல் மிகவும் கஷ்டப்பட்டு, கத்திக் கொண்டே இருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவரிடம் சொன்னேன். இந்த வகையான மாத்திரைகள் வேண்டாம். எவ்வளவோ தடவை எடுத்துக் கூறினேன். கேட்க மறுத்துவிட்டீர்களே. இப்படிப்பட்ட நிலை வந்துவிட்டதே.

எனக்கு அவருக்கு சிகிச்சை அளிக்க இஷ்டமில்லை. வேறு ஒரு மருத்துவரை அழைத்து, அவரை சிகிச்சை அளிக்கும்படி கூறிவிட்டேன்.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com