
ஆத்திச் சூடியில் ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்றுதான் உள்ளது. நமது முன்னோர்களும் ஆலம் விழுது, வேலங்குச்சி, நாயுருவி வேர் முதலான இயற்கைப் பொருட்கள் கொண்டுதான் பல் துலக்கினார்கள். அவர்கள் பற்கள், நமது பற்களை விட உறுதியாகவே இருந்தன. அவர்களுக்கு சொத்தைப் பல் இல்லை. வாய் துர்நாற்றமில்லை பல் துலக்குவதற்காக ஒரு காசு கூட செலவும் செய்யவில்லை. அப்போது பல் மருத்துவர்களே இல்லையென்றே கூறலாம்.
வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு வந்த பின்னர்தான், பல் துலக்க, பற்பசை நமது நாட்டிற்கு அறிமுகமாகியது. பற்பசை காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். பற்பசையில் வேதியில் பொருள் கலந்திருப்பால், பற்பசை கொண்டு நாமும், நமது சந்ததியினரும் பல் துலக்க ஆரம்பித்த பின் தான் நம்மிடையே சொத்தைப் பல், பல்லில் ஓட்டை, வாய் துர்நாற்றம் மற்றும் பிற இதர குறைபாடுகளும் அதிகரித்து வருகின்றது. பல் மருத்துவர்களும், மனிதராகிய நமக்கு மட்டும் அதிகரித்து வருகின்றனர்.
மனிதரைத் தவிர, மனிதரை விடக் கீழான உயிரினங்களான அனைத்து விலங்குகளும் பல் தேய்ப்பதே இல்லை. அவைகளுக்கு பல் சம்பந்தப்பட்ட எவ்விதப் பிணியுமில்லை. வாய் துர்நாற்றமுல்லை. பல் மருத்துவருமில்லை. காரணம், அவ்வுயிரினங்கள் உலகில் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை இறைவன் தந்த இயற்கைத் தூய்மையுள்ள தனக்குரிய இயற்கையுணவை மட்டும் கிடைத்த போது உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. தன் உணவுத் தூய்மையால் அவைகளது பற்கள் தூய்மையாக இருக்கின்றன. கண்கள், முடி, உடல் மற்றும் அனைத்து உள், வெளி உறுப்புக்களும் தூய்மையாக இருக்கின்றன. எவ்விதச் சிக்கலுமின்றி, எவ்வித பழுதுமின்றி, எவ்வித பிணியும் இன்றி, எவ்வித மருந்து மற்றும் மருத்துவமும் இன்றி, மருத்துவரின் ஸ்கேன் எக்ஸ்ரே இன்றி, அறுவை சிகிச்சை இன்றி, மாற்று உறுப்பு பொருத்துதல் இன்றி இயற்கை ஆரோக்கியம், ஆனந்த வாழ்வு வாழ்ந்து வருகின்றன.
ஆனால், ஒப்பற்ற மனிதராகிய நாம் மட்டும், நமது சிந்தனை, விலங்குகள், பறவைகள் இயற்கையாக உண்டு, இயற்கையாக வாழ்ந்து, என்றும் இயற்கை நலத்துடன் வாழ்வது குறித்து செல்லாது, மருந்து, மருத்துவம், மருத்துவர், ஸ்கேன், எக்ஸ்ரே அறுவை சிகிச்சை, மாற்று உறுப்புப் பொருத்துதல் முதலான இயற்கை வழி – உரிய வழி அல்லாதவற்றில் செல்வதாலும், அதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாலும், இயற்கை வழியில் – இறைவழியில் சிறிதும் நம்பிக்கை இல்லாததாலும், இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைந்து வருகின்றோம்’. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு ஊர் ஊராக அலைந்து வருகின்றோம். திசை மாறிய பறவைகள் மாதிரி திண்டாடி வருகின்றோம்.
ஆதியில் சிக்கி முக்கிக் கல்லைக் கண்டு, நெருப்பைக் கண்டு பிடிக்கும் முன்னர், ஆமும் சமைக்காது, பச்சையாகத்தான், இயற்கையான இயற்கை உணவைத் தான் உண்டு வந்தோம். அப்போது நாமும், பல் துலக்க வேண்டிய அவசியமில்லாது, பல் துலக்காமல் தான் இருந்து வந்திருப்போம் என்று நெருப்பைக் கண்டோமோ, இயற்கையான உணவை நெருப்பில் பொசுக்கி உண்ணத் துவங்கினோமோ, அன்றிலிருந்தே நமது உணவின் தூய்மை கெட்டு, பல் துலக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அவ்விதமே நமது கண்கள், உடல், முடி, எலும்பு, நரம்பு, நகம், மற்றும் பிற பிணிக்கு ஆளாகி, மருத்துவத்தை நாடி, மேலும் பல சிக்கல்களுக்கு இன்னல்களுக்கு அடிமையாகி, உலகில் எங்கேயும் நிரந்தர தீர்வு காண இயலாது திக்கு முக்காடுகிறோம்.
இயற்கையுணவில் – இயற்கை வாழ்வில் சிதைந்த நாம், இயற்கை உணவு இயற்கை வாழ்வு மூலம் தான் நம்மையும், நமது சந்ததியினரையும் சீராக்க இயலும். பிற எந்தவொரு வழி முறையும் நம்மை சீராக்க இயலாது. இனியாவது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம்.’
Paste is waste, ஆதலால், உறுதியாக, வேதியில் கலந்த பற்பசையில் பல் துலக்கப் பயன்படுத்த வேண்டாம். தாவரப் பொருள் கலந்த பற்பசை பரவாயில்லை. அதுபோல் வேதியல் பொருள் கலந்த பற்பொடியும் வேண்டாம். தாவரப் பொருள் கலந்த இயற்கை மூலிகைப் பற்பொடி பரவாயில்லை. ஆலம் விழுது, வேலங்குச்சி, நாயுருவி வேர் (வேலங்குச்சி என்றால் வேப்பமரக் குச்சி அல்லது கருவேலங்குச்சி எனப்பொருள் கொள்ளலாம்) முதலானவை கொண்டு நாமும், நமது சந்ததியினரையும் பல் துலக்கப் பழக்குவது உத்தமம். அல்லது நஞ்சு இல்லாத, துளசி இலை, கருவேப்பிலை, மா இலை, கொய்யா இலை, எலுமிச்சை இலை போன்ற ஏதேனும் ஒரு வகையான இலைகளை வாயில் போட்டு மென்று, அந்த இலையின் சக்கை சாறுடன் பல் துலக்கலாம். எலுமிச்சம் பழத்தோல், சிறு வெங்காயம் கொண்டு கூட பல் துலக்கலாம். முழு இயற்கையுணவில் வாழத் தொடங்கி விட்டால் எதுவுமில்லாமல் கூட, கை விரலைக் கொண்டு மட்டும் பல் துலக்கலாம்.
எனவே, புதுமையைப் புறக்கணிப்போம்; பழமையில் பழகுவோம். நம்மையும், நமது மானிட சமுதாயத்தையும், உலகையும் இயற்கை வழியில் வழி நடத்துவோம். இன்னலின்றி இனிமையாக வாழ்வோம். இயற்கை வழியறியாத பிற மனிதருக்கு வழிகாட்டியாக வாழ்வோம்.
நமது வழி, தனி வழி; அதுதான் இயற்கை வழி!
தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.