
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ எனும் சொற்றொடர் சமையலுணவிற்குத் தான் பொருந்தும்; இயற்கை உணவிற்குப் பொருந்தாது. சமையல் உணவில் வாழும் போதுதான், அளவுக்கு மிஞ்சி சாப்பிட இயலும்; சுவை மிகுந்த அமிர்தம் போன்ற சமையல் உணவும், இதர சமையல் உணவும் அரை வயிறுதான் உண்ண வேண்டும். பசியோடு உண்ண உட்கார வேண்டும். பசியோடு உண்டு முடித்து எழுந்திருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டால், நமது ஆரோக்கியத்துக்கு ஆபத்து விளைவிக்கும்.
இயற்கை உணவில் வாழும் போது, எவ்வளவு சுவையான இயற்கை உணவாக இருந்தாலும், இயல்பாகவே அரை வயிறுக்கு மேல் உண்ண முடியாது. அதனால் தான், பெரும்பாலும் இயற்ஐ உணவிற்உ மாறியவர்களுக்கு இருந்த அனைத்து நோய்களும் எளிதாக விரைவாக, யாருடைய உதவியும் இன்றி நமக்கு நாமே நீக்கி நோய்க்கு இடம் கொடுக்காமல், வரும் முன் காத்தும், ஆரோக்கிய ஆனந்த வாழ்வு வாழ இயலுகின்றது.
இயற்கை உணவில், இயற்கையான மெய்யான ருசி இருப்பதால், அளவுக்கு மிஞ்சி உண்ண முடிவதில்லை. உடற்பருமனும் ஏற்படுவதில்லை. தொந்தியும் மறைகின்றது. சமையல் உணவில் தான் பொய்யான, செயற்கையான ருசி இருப்பதால், அளவு அறியாது, அளவுக்கு மிஞ்சி உன்ணுகின்றோம். உடற் பருமனும் ஏற்பௌகின்றது. தொந்தியும் உண்டாகின்றது. மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தமும் உண்டாகிறது. எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவதைத் தவிர்க்கவும், சமையல் உணவைத் தவிர்த்து, இயற்கை உணவை இயன்றளவு ஏற்போம். இன்பத்தில் திளைப்போம்.
சமையல் உணவில் தான் உடலுக்கு ஊறு விளைவிக்கும் உப்பு, புளி, காரம், எண்ணெய் முதலிய செயற்கை ருசிகளை சேர்த்து மேலும் வேண்டாத மசாலாப் பொருட்களும் சேர்த்து அளவுக்கு மிஞ்சி, வயிறு புடைக்க உண்ணுகின்றோம். இயற்கை உணவில் உப்பு, புளி, காரம், எண்ணெய் போன்றனவும், இதர மசாலாப் பொருட்களும் சேராததால், அளவுக்கு மிஞ்சி உண்ண முடியவில்லை.
நமது உடல் அமைப்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எழுபது விழுக்காடு காரத்தன்மை (Alkaline), முப்பது விழுக்காடு அமிலத்தன்மை (Acidity) உள்ள உணவு வேண்டும். இயற்கை உணவில் வாழும் போது தான் இந்நிலை நமது உடலில் உண்டாகிறது. சுகம் கிட்டுகிறது. முழுவதும் சமையல் உணவில் வாழும் போதும் நமது உடலில், மாறாக, எழுபது விழுக்காடு அமிலத்தன்மை (புளிப்புத்தன்மை) முப்பது விழுக்காடு காரத்தன்மை உண்டாகிறது. இந்நிலை ஏற்படும்போது, உடலில் சுகமின்மை உண்டாகிறது.
மேலும், சமையல் உணவில் வாழும் போதுதான், ஏதேனும் அவ்வப்போது, அடிக்கடி நொறுக்குத் தீனி தின்னும் உந்துதல் உண்டாகிறது. இயற்கை உணவில் வாழும் போது, இடையிடையே இடைத்தீனி உண்ணும் உந்துதலும், நொறுக்குத் தீனி தின்னும் உந்துதலும் ஏற்படுவதில்லை. இடைத்தீனி, நொறுக்குத்தீனி என்பது அளவுக்கு மிஞ்சிய தீனியாகும்.
சமையல் உணவில் அளவுக்கு மிஞ்சி உண்ணும்போது பொருளாதார விரையம், உணவுச் செலவு, மருத்துவச் செலவு எனும் பெயரில் ஏற்படுகின்றது.
இயற்கையுணவில் அளவோடு உண்ண முடிவதால், உணவுச் செலவு, மருத்துவச் செலவு எனும் பெயரில் பொருளாதார விரையமும் ஏற்படுவதில்லை. வீண் அலைச்சலும் ஏற்படுவதில்லை.
எனவே, அளவுக்கு மிஞ்சி உண்ணும் சமையல் உணவை உதறித் தள்ள உந்துவோம். அளவோடு உண்ணும் இயற்கை உணவை இனிதாக வரவேற்போம்.
மருந்தில்லா உலகை உருவாக்குவோம், நோயில்லாத மாந்தராக மாற்றுவோம். எளிய ஆன்மிக வாழ்வு வாழ்வோம். இறையோடு இணைந்த வாழ்வில் இணைவோம். சமையல் உணவிலிருந்து இயற்கை உணவிற்கு மாறுபவர்கள் அனைவரும் இப்பேரின்ப நிலை அடையலாம்.
சமைத்துண்பது சிற்றின்பத்திற்குச் சமம். சிற்றின்பம் அழிவைத் தரும். இயற்கை உணவு உண்பது பேரின்பத்திற்குச் சமம். பேரின்பம் ஆக்கத்தைத் தரும். சூரிய வெப்பம் ஆக்க வெப்பம். நெருப்பு வெப்பம் அழிவு வெப்பம்.
இயற்கை உணவில் இறைச்சி உணவு இல்லாது போகும். மது மறையும். புகைப்பது புகைந்து விடும். சொர்க்க வாழ்வு சொக்கும்.
தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.