
இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பரவலாகப் பரவியுள்ளனர். இந்நோயைப் பணக்கார நோய் என்றும் அழைப்பர். இதுவும் பரம்பரை நோய் எனக் கூறப்படுகிறது. கணைய உறுப்பு வலு குன்றி, இன்சுலின் சுரப்பது குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது எனவும் கூறப்படுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கூடுவதாலும், குறைவதாலும் இந்நோய் ஏற்படுகின்றது. இந்நோய்க்கு ஆளானவர்கள் பசி தாங்க மாட்டார்கள். கிறுகிறுப்பு ஏற்படும். மிகவும் தளர்ச்சியாக காணப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நோய்க்கு ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்கள், ஆயுள் முழுவதும் ஆங்கில மருந்து பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. இவ்விதம் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க, நாள் தோறும், ஆங்கில மருந்தைப் பயன்படுத்தினால் அம்மருந்தின் பக்க விளைவாகப் பலர் நாளடைவில் இதய நோய், கண் நோய், சிறு நீரக நோய்களுக்கு ஆளாகி, மிகவும் அல்லறுகின்றார்கள்.
மேலும், சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு விரல், கால் மற்றும் உடலில் எந்தவொரு பகுதியிலும் புண் வந்தாலும், ஆறவே ஆறாது. விரலில் புண் வந்தால் விரலை வெட்டியெடுக்க வேண்டியதாகிறது. காலில் புண் வந்தால், காலே துண்டிக்கப்படுகிறது.
இத்தகைய கொடுமைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆளாக வேண்டாம். சர்க்கரை நோயுள்ளவர்கள் செயற்கை இனிப்பு உணவுகளான சர்க்கரைப் பொங்கல், பாயசம் மற்றும் அல்வா, ஜாங்கிரி, லட்டு, ஜாமூன், மைசூர்பாகு, அதிரசம், மிட்டாய், சாக்லெட், பிஸ்கெட் முதலிய எந்தவொரு செயற்கை இனிப்பு உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மற்றும் வெள்ளை சர்க்கரை கலந்த காபி, டீ முதலிய செயற்கை பானங்களையும் வேதியல் இனிப்பு சுவை கலந்த எந்தவொரு செயற்கை குளிர் பானமும் அருந்தக் கூடாது.
சர்க்கரை நோயுள்ளவர்கள் ஆங்கில மருத்துவத்தை அணுகவே கூடாது. மற்றும் பிற எந்தவொரு மருத்துவத்தையும் அணுகத் தேவை இல்லை. சர்க்கரை நோயுள்ளவர்கள் கசப்பும், துவர்ப்பும் உள்ள உணவை அதிகம் உண்ண வேண்டும். கசப்பு சுவை உள்ள உணவுகள் தேங்காய், தேன், வேப்பிலைக் கொழுந்து, பாகற்காய், வில்வம் பழம் மற்றும் வில்வ இலை. துவர்ப்பு சுவை உள்ள உணவுகள் நெல்லிக்கனி, வாழைத் தண்டு, வாழைப்பூ, நாவற்பழம்ஜ், மாதுளம் பழம், மாங்காய் கொட்டைப் பருப்பு, நாவற்பழ கொட்டைப் பொடி.
மேலும் ஆவாரம் பூ, கறிவேப்பிலை, சிறு குறிஞ்சான், சிறியா நங்கை, வெந்தயம் ஆகியன உனடும் சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம். வெறும் வயிற்றில் இயன்ற அளவு பச்சைத் தண்ணீர் அவ்வப்போது, அருந்தியும் சர்க்கரை நோயைத் தணிக்கலாம். உடலில் நன்கு வியர்வை கொட்டும்படியாக சூரிய ஒளிக் குளியல், நடன தியானம் மற்றும் உடல் உழைப்பு, உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.
சமைத்த அரிசி முதலான தானிய உணவை உண்ணும் போது, உடலில் குளுக்கோஸ் சத்து மிகுதியாகி, சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சமைத்த காய்கறி, கீரை உணவை உண்டால், குளுக்கோஸ் மிகுதியாகாது. சர்க்கரை நோய் குணமாகும். இவ்வாறாக மதியம் ஒரு வேளை, அல்லது காலை, மதியம், இருவேளை சமைத்த காய்கறி, கீரை மட்டும் உணவாக உண்டு (சமைத்த தானிய உணவை முற்றிலும் தவிர்த்து).
காலை மாலை இரு வேளைகளில் தேவையான தேங்காயை உண்டு, கொய்யா, பப்பாளி, பன்னீர் திராட்சை ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், நாவல் பழங்களையும் தேவையான அளவு உண்டு வந்தால், சர்க்கரை நோய் நிரந்தரமாகக் குணமாகும். அல்லதுமாலை ஒருவேளை மட்டும் தேங்காயும் முன் கூறிய பழ வகைகளையும் (சமையல் உணவுக்குப் பதிலாக) உணவாக உண்ணும் பழக்கம் ஏற்படுத்தினால், சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர நிவாரணம் பெறலாம்.
பழங்களிலுள்ள இனிப்பு, இயற்கையான இனிப்பு.இறைவன் இட்ட இனிப்பு. பழங்களின் இனிப்பு சர்க்கரை வியாதியை ஏற்படுத்தாது. மாறாக சர்க்கரை வியாதிக்கு மருந்தாகி சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும். விரலில், காலில் புண் இருந்தால், தானாகக் குணமாகும், விரலை காலைத் துண்டிக்கவே வேண்டாம். பழங்களில் உள்ள இனிப்பு உடலில் புரூட்டோஸ் சத்தைக் கொடுக்கும். குளுக்கோஸ் சத்தைக்கொடுக்காது. சமையல் உணவை உண்டு, உடனே பழம் சாப்பிடக் கூடாது. சமையல் உணவை நீக்கி, தேங்காயும், பழங்களையும் உணவாக உண்டால் சர்க்கரை வியாதி சம்காரம் ஆகும். தேவை எனில், வாழைப்பழம், மாம்பழம், பேரீச்சை, சப்போட்டா, போன்ற இதர பழங்களையும், முதலில் தேங்காயை உணவாக உண்டு , உடன் இத்தகைய இத்தகைய இதர பழங்களையும் உணவாக உண்டு, சர்க்கரை நோயிலிருந்து நிரந்தரமாக எவ்வித மருந்துமின்றி, எளிதாக விரைவாக, எவ்விதப் பக்க விளைவுமின்றி இனிமையாக நிவாரணம் பெறலாம். மேலும், இனிமையாக நிவாரணம் பெறலாம். மேலும், அனைத்து நோயிலிருந்தும் உறுதியாக விடுதலை பெறலாம்.
அடுத்ததாக, எட்டு நடைப்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பவன முக்தாசனம், யோக முத்ரா, மகா முத்ரா, பாதஹஸ்தாசனம், சக்ராசனம், போன்ற ஆசனப் பயிற்சிகள், அல்லது எளிய உடற்பயிற்சியும் செய்து வருவது நல்லது. பிராணயாயம் மற்றும் தியானப்பயிற்சிகளும் செய்து வந்தால் மேலும் நலம் கிடைக்கும்.
எனவே திருவள்ளுவர் திருவாக்குப்படி மனிதருடைய சர்க்கரை நோய்க்கும், மற்றும் அனைத்து நோய்களுக்கும் மருந்து, மருத்துவரை நாடாது, பிற உயிரனங்களைப் போல் நாமும் இயன்ற அளவு சமைத்த உணவுகளையும், செயற்கை பானங்களையும் தவிர்த்து, இயற்கை உணவு உண்டு, இயற்கை பானங்களை அருந்தி, நமக்கு நாமே மருத்துவராகி, உடல் நலம், உளநலம் உய்யும் வழியை உணர்ந்து உயர்வடைவோம்! மருந்தில்லா, மருத்துவமில்லா உலகை உருவாக்குவோம்!! ஆரோக்கிய உலகைப் படைப்போம்!
நமது உடலில் நோய் ஏற்பட்டால், நோய்க்கு இடம் கொடுத்து வாழ்ந்தால், நோய் முற்றி, உயிர் இழப்பு ஏற்படுகின்றது. மரணம் சம்பவிக்கின்றது. எனவே மரனமிலாப் பெரு வாழ்விற்கு நோய்க்கு இடம் கொடாமல், வரும் முன் காப்போம் எனும் அடிப்படையில் வாழத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் ஏதேனும் நோய் வந்தால், மருந்து, மருத்துவம் மருத்துவரை நாடுவதைத் தவிர்த்து இயற்கை மருத்துவம், யோகாசனம், பிராணாயாமம், தியானம் மூலம் ஆரோக்கியம் அடைந்து மரணமிலாப் பெருவாழ்வு வாழ முயல்வோமாக!
தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.