16. குழந்தை வளர்ப்பு

இன்றைய நாளில், மனிதராகிய நமக்கு மட்டும் தான், நாம் எவ்வளவு கற்றவராயினும், நமது குழந்தை பிறந்ததிலிருந்து என்ன என்ன
16. குழந்தை வளர்ப்பு
Published on
Updated on
3 min read

இன்றைய நாளில், மனிதராகிய நமக்கு மட்டும் தான், நாம் எவ்வளவு கற்றவராயினும், நமது குழந்தை பிறந்ததிலிருந்து என்ன என்ன உணவுகள், எப்போது கொடுக்க வேண்டும் என்ற சரியான புரிதல் இல்லை. சிறு பிராயத்திலிருந்தே குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் எனும் இயற்கை அறிவு தெரியாமல், படித்த அறிவுப்படி வளர்த்து, குழந்தைகளை இளம் வயதிலேயே நோயாளியாக ஆக்குகிறோம். மேலும், மெய்ப்பொருள் தெரியாத நிலையில் குழந்தைகளையும், இளம் தலைமுறையினரையும் உருவாக்கி வருகிறோம்.

இப்போக்கினை மாற்றி, பேராற்றலுடைய இறையாற்றலுடைய இயற்கை முறையில் குழந்தைகளை வளர்க்க முயல்வது நல் உலகை உருவாக்கும் முயற்சியாகும். விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதன், சிறிது, குட்டி போட்டு, பாலூட்டி வளர்க்கும் அனைத்து விலங்குகளையும் இறுதியாக குரங்கையும் பற்றி சிந்திப்போம்.

பருவம் எய்திய பின், கரு பிடிக்காத எந்தவொரு விலங்குமில்லை. சுகப்பிரசவமில்லாத எந்தவொரு விலங்கும் இப்புவியில் இல்லை. எந்த ஒரு விலங்கும் உடல் ஊனமுற்ற குட்டியைப் பெற்றெடுக்கவில்லை. குட்டி போட்டால், தாய்ப்பால் இல்லாத எந்தவொரு விலங்குமில்லை. தாய்ப்பால் இல்லாது அவை புட்டிப் பால் கொடுக்கவில்லை காரணம், அவை எல்லாம் தமக்குரிய இயற்கை உணவை மட்டும் உண்டு, தேவைப்படும் போது கிடைத்த போது, சிறிது பச்சைத் தண்ணீரை மட்டும் அருந்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வதே ஆகும்.

விலங்குகள் அனைத்தும், கன்று ஈன்றதும், அக்கன்று அதனது தாய்ப்பாலைத் தான் குடித்து வளர்கின்றது. உதாரணமாக ஒரு பசுங்கன்றுக் குட்டிக்கு, அதை ஈன்ற தாய்ப்பசுதான், தாய்ப்பால் கொடுத்து வளர்க்கிறது. வேறு பசுவிடம், அக்கன்று பால் குடிக்கச் செய்தால் அப்பசு, தான் ஈன்றெடுக்காத பிறிதொரு பசுங்கன்றுக் குட்டிக்குப் பால் கொடுக்காது, தடுத்துவிடும். அதுவும் அக்கன்று, தனது தாய்ப்பசுவின் மடியில் வாய் வைத்து, மடியிலிருந்து தான் பாலை உறிஞ்சிக் குடிக்கும். நம்மைப் போல் பாலைப் பீய்ச்சி, காய்ச்சி, வெள்ளை சர்க்கரை கலந்து, இயற்கைக்கு மாறாகக் குடிப்பதில்லை. மேலும், அக்கன்று பால் குடி பருவம் வரைதான் பால் குடிக்கும். பால் குடி பருவம் மறந்து தனது தாயுடன் சென்று புல்லை மேய்ந்து தின்று பழகியபின்,பாலைக் குடிப்பதில்லை. பசுங்கன்று மட்டும் இவ்வாறு வாழவில்லை, அனைத்து விலங்குகளில் கன்றுகளான குரங்குக் குட்டி, ஆட்டுக்குட்டி, முயல் குட்டி, மான் குட்டி, குதிரைக் குட்டி, ஓட்டகக் குட்டி, ஒட்டகச் சிவிங்கிக் குட்டி, யானைக்குட்டி, அணில் குஞ்சு, எலிக் குஞ்சு, நாய்க் குட்டி, புலிக் குட்டி, சிங்கக் குட்டி, கங்காரு குட்டி, மற்றும் இதர அனைத்து விலங்கினக் குட்டிகளும் இயற்கை விதிப்படி அன்று முதல் இன்று வரை வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதன் மட்டும் மாறிவிட்டான். தனது சந்ததியினரை இயற்கைக்கு மாறாக வளர்த்து வருகின்றான்.

அவ்வாறாயின், ஒரு தாய்க்கு தனது குழந்தைக்குத் தேவையான பால் இருப்பின், தனது தாய்ப் பாலைத்தான் கொடுத்து வளர்த்து வர வேண்டும். மாறாக, நவீன நாகரிக வளர்ச்சியில், தனது மார்பு அழகு போய்விடும் எனும் மாயையில் தாய்ப்பால் இருக்கும் போது தாய்ப்பாலைக் கொடுக்காது, புட்டிப்பால் கொடுக்கக் கூடாது. தாய்ப்பால் போதுமானதாக இல்லையெனில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய் இறந்து விட்டால், அந்நிலையில் அந்தத் தாயின் குழந்தைக்கு தேங்காய்ப்பால் கொடுத்து வளர்க்கலாம். தேங்காய்ப் பாலை நன்கு வடிகட்டி, தேவை எனில் தேவையான பச்சைத் தண்ணீர் கலந்து, காய்ச்சாது பச்சையாகப் புட்டியில் அடைத்துக் கொடுத்து வளர்க்கலாம். தேங்காய்ப் பாலுக்கு இனிப்புத்தேவை இல்லை. தேவைப்படுமாயின், தேன் கலந்தும் கொடுக்கலாம். அல்லது வேதியியல் கலவாத நாட்டு வெல்லம் கலந்து கொடுக்கலாம். இதுபோல் நன்கு வடிகட்டிய இளநீரும், தேங்காய்ப் பாலுக்கு இடை இடையே கொடுத்து வளர்க்கலாம். கண்டிப்பாக வெள்ளைச் சர்க்கரை சேர்க்கக் கூடாது. குழந்தை பிறந்து சுமார் ஆறுமாதம் ஆனபின், பேசீச்சம் பழச்சாறு, திராட்சைப் பழச்சாறு, ஆரஞ்சுப் பழச்சாறுகளும் படிப்படியே, நன்கு வடிகட்டி கொடுக்கலாம். அதன்பின்னர், நன்கு பழுத்த வாழைப் பழம், பப்பாளி, சப்போட்டா, திராட்சை, ஆரஞ்சு முதலிய பழுத்த சாறுள்ள பழங்களை சாப்பிடக் கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் நெய்ச்சோறு, பருப்பு சோறு, இட்லி, புட்டு, கூழ், கஞ்சி போன்ற இதர சமைத்த உணவு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அதன் பின்னர் இளநீரிலுள்ள வழுக்கை தேங்காய் சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தை வளர, வளர அதற்கேற்ப இளந் தேங்காய், அரை விளைச்சல் தேங்காயும் அனைத்துப் பழ வகைகளும், பசியெடுத்து அழும்போதெல்லாம் கொடுத்து வளர்த்து விடலாம். குழந்தை எதையும் உண்ண மறுக்கும் போது, வற்புறுத்தி அல்லது ஏமாற்றி ஆசை காட்டி எந்த உணவையும் திணிக்கக் கூடாது.

குழந்தையை சுதந்திரமாக உண்ண, அருந்த, விளையாட என அதன் இயல்பில் விட்டு வளர்க்கவும். எதையும் திணிக்க வேண்டாம். வற்புறுத்த வேண்டாம். மிகச் சிறு வயதில் ஆடை அணியும் போது அழுதால், ஆடை அணிவிக்க வேண்டாம். பின் விவரம் தெரிந்த பின் எளிய கதர், அல்லது கைத்தறி அல்லது நூலாடை அணிவிக்கலாம். இன்னும் விவரம் தெரிந்த பின் மழை பெய்யும் போது, மழையில் நனைந்து குளிக்க விரும்பினால் மழையில் குளிக்க அனுமதிக்க வேண்டும். வெயிலில், வெளியில் விளையாட விரும்பினால், அனுமதிக்க வேண்டும். ஆனால் அக்குழந்தைக்கு உரிய நபர் கண்காணிப்பில், அவ்வாறு அக்குழந்தையை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறாக குழந்தை பிறந்ததிலிருந்தே இயற்கை உணவு, இயற்கை பானம், இயற்கை பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நடைமுறைப் படுத்தி வந்தால், அக்குழந்தை தெய்விகக் குழந்தையாக உலகில் திகழும். ஒளி வீசும். உலகில் சிறந்த குடிமகனாக / குடிமகளாகத் திகழும். குருகுலக் கல்வி முறை சிறப்புடையது. இவ்வாறாக, ஒவ்வொரு பெற்றோரும், தங்களது குழந்தைகளை வளர்த்து, ஞானக் குழந்தைகளாக்கி ‘பழ உணவு உண்போர் சமுதாயம்’ உருவாக, உழைக்க, முன் வர இயற்கை / இறை மானிடரை கேட்டுக் கொள்கின்றது.

தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com