17. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு

கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு இன்றைய நாளில் இன்றியமையாததாகக் கருதப்பட வேண்டிய நிலையில் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்’பான கதை
17. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு
Published on
Updated on
2 min read

கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு இன்றைய நாளில் இன்றியமையாததாகக் கருதப்பட வேண்டிய நிலையில் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்’பான கதை போன்று நாம் தள்ளப்பட்டு வருகிறோம். ஏனெனில் இன்றைய நாளில் சுகப்பிரசவம் என்பது உலகிலேயே இல்லையென்ற நிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. நம்மிடைய போலியான ஊட்டச்சத்து கருத்துக்களும், நடைமுறைகளும் நிலவுவதால், சுகப்பிரசவம் அரிதாகி வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் இயற்கைக்கு மாறான உணவுப் பழக்கங்களும், நடைமுறைகளுமேயாகும். மலச்சிக்கலே அனைத்து நோய்களுக்கும் மூல காரணம்; சமைத்துண்ணும் பழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம். சமைத்துண்ணும் உணவில், மலச்சிக்கலைத் தவிர்க்கும் நார்ச்சத்து இல்லை. சமைக்காமல், தனக்குரிய இயற்கை உணவு உண்டு வாழும் அனைத்து விலங்குகளுக்கும் சுகப் பிரசவம் ஆகின்றது.

எனவே ஒரு பெண் கர்ப்பம் தரித்தவுடனாவது, சுகப் பிரசவம் ஏற்படவும், ஊனமுற்ற குழந்தை பிறப்பைத் தவிர்க்கவும், தாய்ப்பால் போதிய அளவு கிடைக்கவும், பிறக்கும் குழந்தைக்குத் தரமான தாய்ப்பால் கிடைக்கவும், மூன்று வேளை சமையலுணவைத் தவிர்த்து, காலையும், இரவும் தேவையான தேங்காயும், பழ வகைகளும், உணவாக உண்டு, தேவையெனில் மதியம் ஒரு வேளை மட்டும் சமைத்த சைவ உணவு உண்டு வாழ்வது நல்லது. முடிந்தால் மதியம் ஒரு வேளையும் சமைத்த்ட சைவ உணவைத் தவிர்த்து, அவல் பச்சைக் காய்கறிகள், பழங்கள் என உணவாகத் தேவையான அளவு உண்டு வாழ்வது, மேலும் சிறப்புடையதாக இருக்கும்.

இவ்வாறு, குறைந்தபட்சம் பிரசவம் ஆகும் வரையிலாவது உணவை மாற்றி உண்டு வாழ்ந்தால், உறுதியாக சுகப்பிரசவம் கிட்டும். தாய்ப்பால் போதிய அளவு சுரக்கும், தாய்ப்பாலின் தரமும் உயர்வாக இருக்கும். இத்தகைய தாய்ப்பாலை அருந்தும் குழந்தை சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். இந்நிலையில் பிரசவிக்கும் குழந்தைகள், இதர குழந்தைகளை விட எடை குறைவானதாக இருக்கும். இதைக் கண்டு அஞ்சவேண்டாம். கவலை வேண்டாம்.

மேலும் கர்ப்பம் தரித்த நாளிலிருந்து பிரசவம் ஆகும் வரை, அந்தக் கர்ப்பிணிப்பெண் ஓரளவாவது இயன்ற வேலைகளை செய்து வர வேண்டும். ஆனால், இன்றைய உலகம், கர்ப்பிணிப் பெண் ஆடக் கூடாது, அசையக் கூடாது, அலுங்காமல், குலுங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இது சரியல்ல. பிரசவம் ஆகும் வரை அப்பெண் முடிந்த வேலைகளைத் தவறாமல் செய்து வர வேண்டும். அப்போதுதான் சுகப்பிரசவம் கிடைக்கும்.

அடுத்ததாக, கர்ப்பம் தரித்தவுடன், கணவரோடு உடலுறவைப் பிரசவம் ஆகும் வரை தவிர்த்தால், உடல் ஊனமுற்ற குழந்தை பிறப்பதைத் தவிர்ப்பதோடு, மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கும், கருவுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் மிக்க நன்மை பயக்கும். விலங்குகூட கர்ப்பம் தரித்த பெண் விலங்குடன் உடலுறவைத் தவிர்ப்பதை இன்றும் கவனிக்கலாம். சினை வாடை, கர்ப்ப வாடை இல்லாத பெண் விலங்குடன் தான் எந்தவொரு ஆண் விலங்கும் உடலுறவு கொள்ளும்.

அதுபோல், எந்தவொரு விலங்கும் கர்ப்பம் தரித்ததிலிருந்து பிரசவம் ஆகும்வரை எப்போதும் போல் இரை தேடி அலைந்து உண்டு வாழ்கின்றது. சுகப் பிரசவம் ஏற்படுகின்றது. நம்மைப் போல் ஆடாமல், அலுங்காமல், குலுங்காமல் முடங்கிக் கிடப்பது இல்லை.

முழு இயற்கை உணவில், அல்லது இரு வேளை இயற்கை உணவில் கர்ப்பிணிப் பெண் வயிறு சமைத்துண்ணும் கர்ப்பிணிப் பெண் வயிறு போன்று மிகவும் பெரிதாக இருக்காது. ஓரளவு தான் பெரிதாக இருக்கும்.

இவ்வாறு அதிகப்பட்சம் இயற்கை உணவில் வாழும் கர்ப்பிணிப் பெண்கள் தான், உலகிற்கு ஆரோக்கியக் குழந்தையைப் பெற்றெடுத்து வழங்க இயலும் எனவே ஆரோக்கிய உலகு, நோயற்ற உலகு உருவாக உண்பதும், நல்ல சிந்தனையில் வாழ்வதும், இயன்ற அளவு உடலுழைப்பு செய்வதும் முக்கியமானதாகும்.

போலிப் பழக்கத்தைத் துறப்போம். இயற்கை பழக்கத்தை ஏற்போம்.

தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com