
இன்றைய சூழ்நிலையில், பெற்றோர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கும்பட்சத்தில், குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காகவும், மனித உறுப்புகளை கழற்றிக் கொள்வதற்காகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தவும் கடத்திச் செல்லப்படுகிறார்கள்.
மத்திய அரசும், மாநில அரசும் சட்டங்கள் இயற்றி குழந்தைகளின் எதிர்கால நலத்திற்காக செயல்பட்டாலும் மக்களின் கடமை, பொறுப்பு மிகவும் அதிகம்.
இதனை உணர்ந்து குழந்தை வளர்ப்பில் குடும்பங்களும், சமூகங்களும் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சிறுவயது குழந்தைகள் கையிலே இன்றைக்கு செல்லிடப்பேசி, மடிக்கணினி, கணிப்பொறி இருப்பதே குடும்பத்திற்கும் பெற்றோர்களுக்கும் பெருமை என்று நினைத்துக் கொண்டு விலை அதிகமாக இருந்தாலும் அவற்றை வாங்கித் தருகின்றனர்.
இந்த குழந்தைகள் அனைத்தும் தற்போது செல்லிடப்பேசியில் "டச்' செய்து கொண்டு இருக்கிறதே தவிர சமுதாயத்திடம், குறிப்பாக உற்றார், உறவினர்களிடம் 'டச்' இல்லாமல் சென்று கொண்டு இருக்கின்றனர்.
ஓடி விளையாடு பாப்பா என்றும் மாலை முழுவதும் விளையாட்டு என்று நமது பாட்டன், பாட்டி சொன்ன பொன் மொழிகள் எல்லாம் மறந்து போய் குழந்தைகள் பள்ளிகளில் ரோபோக்களை போன்று பார்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மதிப்பெண் பெறுகின்ற இயந்திரமாக மட்டுமே குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். பெற்றோர்களின் கனவுகளை, லட்சியங்களை குழந்தைகளின் மீது திணித்து, அவர்களைச் சுயமாகச் சிந்திக்க விடாமல் திணறடித்து வருகின்றனர்.
இதனால் சில குழந்தைகள் மனப்பாடம் செய்ய முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி வீட்டை விட்டு, பள்ளிகளை விட்டு ஓடிவிடுவதும் நடைபெறுகிறது. ஓடுகின்ற குழந்தைகள் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள சமூக விரோத கும்பலிடம் மாட்டிக் கொண்டு அக்கும்பலின் சட்ட விரோத செயல்களில் ஈடுபட வற்புறுத்தப்படுகின்றனர்.
குழந்தைகள் வளரும் வீட்டு அறையும், பள்ளியில் வகுப்பறையும் குழந்தைகளின் தனித்திறமைகளையும், அறிவியல் சார்ந்த ஆற்றல்களையும் அடையாளப்படுத்தக் கூடிய தளமாக இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் மாண்புமிக்க மாணவர்களாக உருவாக முடியும்.
குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்: பராபட்சம் காட்டக்கூடாது, குழந்தைகளைப் புறக்கணித்தல் மற்றும் ஒதுக்குதல் கூடாது, மாற்றுதிறன் உடையவர்களின் மனதைக் காயப்படுத்தக்கூடாது. தகாத வார்த்தைகளைப் பேசுதல் கூடாது, குழந்தைகளைப் பொது இடங்களில் கேலி, கிண்டல் செய்தல் கூடாது. குழந்தைகளைப் பிற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. பொருத்தமற்ற செயல்களைச் செய்யச் சொல்லி குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது.
குழந்தைகளின் முன்பு தீய பழக்கங்களைக் கையாளக் கூடாது. சொந்தக் கருத்துகளை, நம்பிக்கைகளை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது.
அறிமுகமில்லாத நபர்களால் தான் பாதுகாப்பின்மை ஏற்படுகின்றது என்பது தவறு. குழந்தைகளுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களால் தான் இந்த பாதுகாப்பின்மை அதிகம் நிகழ்கின்றன.
குழந்தைகள் நமது தேசத்தின் விலை மதிப்பில்லா சொத்து. இவர்களை நாற்றங்கால் போன்று பேணி பாதுகாப்பது நமது அனைவரின் கடமை. ÷வருங்கால இந்தியாவை வளம்மிக்க இந்தியாவாகவும், உலகுக்கு வழிகாட்டியாக இருக்கும் இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள் தான் இந்த இளம் தளிர்கள்.
இவர்களது வாழ்வியல், வளர்ச்சி, பாதுகாப்பு என்பது முன்னோர்கள் நமக்குத் தந்த கலாசாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தேனீக்கள் நமது குழந்தைகள். இவர்களைப் பாதுகாப்போம், பண்படுத்துவோம், வளமான, இளமையான, பாரதத்தை உருவாக்குவோம். இளம் தளிர்களின் எதிர்காலம் நம் அனைவரின் கையில் உள்ளது. இதனை நம்பிக்கையோடு காப்பாற்றுவோம்.
மா. தில்லை
சிவக்குமார், நாமக்கல்.
குழந்தைகள் வளரும் வீட்டு அறையும், பள்ளியில் வகுப்பறையும் குழந்தைகளின் தனித்திறமைகளையும், அறிவியல் சார்ந்த ஆற்றல்களையும் அடையாளப்படுத்தக் கூடிய தளமாக இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் மாண்புமிக்க மாணவர்களாக உருவாக முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.