தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - ஒன்றரை கிண்ணம்
ரவை - ஒரு கிண்ணம்
துருவிய சீஸ் - அரை கிண்ணம்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
பால் - 2 டம்ளர்
மைதா - 2 தேக்கரண்டி
ப்ரெட் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: ரவையை வறுத்தெடுத்துப் பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும். அதனுடன் வதக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மைதாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, பிறகு சிறியதாக எடுத்து உருட்டி அதனுள் தயார் செய்து வைத்துள்ள கலவையை வைத்து ரோல் போல செய்து கொள்ளவும். பிறகு, ப்ரெட் தூளில் புரட்டி எடுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தயார் செய்து வைத்துள்ள ரோலைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


