சென்னையில் மலேசிய உணவுகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மலேசிய சுற்றுலாத்துறை தி ரைன் டிரி ஹோட்டலுடன் இனைந்து இரண்டு வார கால மலேசிய உணவுத்திருவிழாவை சென்னையில் நடத்துகிறது. ஏப்ரல் 22 முதல் மே 8 வரை நடைபெறும் இந்த உணவு திருவிழா மலேசியாவின் பிரசித்தி பெற்ற உணவு வகைகளை வழங்கி சுவைமிகு விருந்து அளிக்க உள்ளது.
இந்த உணவு திருவிழா மலேசியாவின் ஷங்காரி லா ஹோட்டல் தலைமை சமையல் கலைஞர் முகது அஸ்ரி ரஹ்மானை சென்னைக்கு அழைத்து வந்துள்ளது. சமையல் கலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள இவர் பிரைடு நூடுல்ஸ், சிக்கன் ரைஸ், ரெண்டாங் மசாக் ஹிதாம் உள்ளிட்ட சுவைமிகு உணவு வகைகளை தயாரித்து வழங்குகிறார்.
மலேசிய உணவுகளை சுவைக்க ரைன் டிரி ஹோட்டல் அழைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.