சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சீரக சம்பா மட்டன் பிரியாணி

செய்முறை: குக்கரில் மட்டன் போட்டு அத்துடன் கொஞ்சம் தயிர், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது மற்றும்

News image
Updated On :18 மே 2016, 8:50 am

தேவையான பொருள்கள்

சீரக சம்பா அரிசி - 1/4 கிலோ

மட்டன் - அரை கிலோ

இஞ்சி - 50 கிராம்

பூண்டு - 25 பல்

பெரிய வெங்காயம் - 4

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 4

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை  தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது -  2 தேக்கரண்டி

தேங்காய் - ஒரு மூடி

தயிர் - அரை கிண்ணம்

லெமன் - 1

புதினா - ஒரு கட்டு

மல்லித் தழை - ஒரு கட்டு

நெய் - அரை கிண்ணம்

எண்ணெய் - அரை கிண்ணம்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கிராம்பு - 3

பட்டை - 3 சிறிய துண்டு

ஏலக்காய் - 3

பிரிஞ்சி இலை - ஒன்று

சோம்பு - 1 தேக்கரண்டி

செய்முறை: குக்கரில் மட்டன் போட்டு அத்துடன் கொஞ்சம் தயிர், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 5விசில் வரும் வரை வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.             

குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப்போட்டு வதக்கவும்.   வெங்காயம் 2 நிமிடங்கள் வதங்கியதும்,  மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர்,           

நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் மீதமுள்ள தயிர் சேர்க்கவும்.                 

தேங்காயுடன் இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கிண்ணம் பால் எடுத்து வைக்கவும். தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8  கிண்ணம் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித்தழை சேர்க்கவும்.         

ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி 2 விசில் விட்டு  குக்கரை இறக்கிவிடவும்.

பின்பு 10 நிம்டம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும். சுவையான சீரக சம்பா  மட்டன் பிரியாணி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.