

தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 750 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 3/4 கிண்ணம்
முட்டை - 1
பச்சை மிளகாய் - 7 (நறுக்கியது)
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை: முதலில் மிக்ஸியில் தேங்காய், பொட்டுக்
கடலை மற்றும் கசகசா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு தாளித்து, பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு வதக்கி, பிறகு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மட்டன் கைமா, முட்டை, தேங்காய் விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் உருண்டைகளாகப் பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் கோலா உருண்டை ரெடி.
****
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.