

தேவையானவை:
அரிசி மாவு - 1 கிண்ணம்
உளுத்தம் மாவு - அரை கிண்ணம்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
ஊற வைத்த கடலைப்பருப்பு - கால் கிண்ணம்
எண்ணெய் - 1 கிலோ
செய்முறை: எண்ணெய்யை தவிர்த்து மேலே உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு சற்று கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பின்னர் , வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காய வைக்கவும்.
அதற்குள் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக எடுத்து அதிரசத்துக்கு தட்டுவது போன்று வட்டமாக ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தட்டிக் கொண்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.