தேவையானவை: அரிசி - 200 கிராம், எலுமிச்சம்பழம் - 2, கடுகு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைபருப்பு - 1 தேக்கரண்டி, வறுத்து,தோல் நீக்கிய வேர்க்கடலை - 4 தேக்கரண்டி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு... 3 விசில் வந்ததும் இறக்கிவிடவும். விசில் சத்தம் அடங்கியதும். சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும். பின்னர், எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், கடலை பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும். பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சைச்சாற்றை விட்டு கிளறி இறக்கிவிடவும். பின்னர், ஆற வைத்துள்ள சாதத்தில் எலுமிச்சைக் கலவையைக் கொட்டி கிளறி, உப்பு சேர்த்து சீராகக் கலந்து பரிமாறவும்.
•••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


