சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பூண்டு ரைஸ்

வாணலியில் எண்ணெய்  விட்டு, அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

News image
Updated On :22 செப்டம்பர் 2016, 9:07 am


தேவையானவை :

சாதம்  - 2 கிண்ணம்
பூண்டு - 10 - 15 பல்
வர மிளகாய் - 2
தனியா - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு -  1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு  - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய்  விட்டு, அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து ஆற விடவும். வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டு பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே எண்ணெய்யில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும். கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.