
எண்ணெய் சாதம். இது தஞ்சாவூர் பக்கங்களில் செய்யக்கூடிய ஆரோக்கியமான உணவு.
தேவையானவை:
இரவு வடித்து மீந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை தண்ணீரை பிழிந்து சாதத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
மோர் மிளகாய் - 3
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மோர் மிளகாயைக் கருக வறுத்து எடுத்து பிழிந்து வைத்துள்ள சாதத்தில் சேர்க்கவும். பின்னர், மோர் மிளகாய் வறுத்த அதே எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயப்பொடி தாளித்து பிசையவும்.
இதற்கு பழைய அடி ரசவண்டல் இணையாகும். சாதம் தேவையான அளவு சேர்த்து பிசையவும். பழைய சாதம் ஒத்துக் கொள்ளாதவர்கள், தண்ணீர் ஊற்றாத சாதத்திலும் செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.